Site icon Taminews|Lankanews|Breackingnews

அரசு நிலம் கையகப்படுத்தல்: பெண் எம்பிக்கு எதிராக புதிய குற்றச்சாட்டு

அரசு நிலம் கையகப்படுத்தல்: பெண் எம்பிக்கு எதிராக புதிய குற்றச்சாட்டு

ஹந்தானவத்த பகுதியில் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 43 ஏக்கர் நிலம், நில சீர்திருத்த சட்டத்தை மீறி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த்ராணி கிரியெல்லவுக்கு விடுவிக்கப்பட்டதாக பொது நிறுவனங்கள் குழு (கோப்) விசாரணையில் தெரியவந்துள்ளது. நில சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பத்மசிறி லியனகே, கோப் குழு முன் ஆஜரானபோது, குழுவின் தலைவர் வைத்தியர் நிஷாந்த சமரவீரவின் கேள்விக்கு பதிலளிக்கையில், சமிந்த்ராணி கிரியெல்லவுக்கு நிலம் வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை எனவும், 50 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் 22 உரிமைகோருபவர்கள் மற்றும் உரிமைகோராத 46 பேர் இந்த நிலத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், நில சீர்திருத்த ஆணைக்குழுவால் யாருக்கும் நிலம் விடுவிக்கப்படவில்லை எனவும், உரிமைகோரப்படாத நிலங்களை விடுவிக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை எனவும், அவை ஆணைக்குழுவுக்கு மாற்றப்படுவதில்லை எனவும் அவர் கூறினார். எனவே, சமிந்த்ராணி கிரியெல்லவுக்கு நிலம் விடுவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார்.

Exit mobile version