Home » ஆண்களை விட அதிக காலம் வாழும் பெண்கள்

ஆண்களை விட அதிக காலம் வாழும் பெண்கள்

by newsteam
0 comments
ஆண்களை விட அதிக காலம் வாழும் பெண்கள்

ஆண்களை விட பெண்கள் அதிக காலம் வாழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இது தொடர்பிலான ஆய்வு ஒன்று அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் பெண்களின் வாழும் காலம் 80 ஆண்டுகளாக உள்ளது.
அதுவே ஆண்கள் 75 ஆண்டுகள் என்ற அளவில் உள்ளது.இதன்படி, ஆண்களை விட பெண்கள் அதிக காலம் வாழ்கின்றனர் என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளனர் இந்த ஆய்வினை மேற்கொண்ட தரப்பினர்.உடல்நலம் பாதிக்கப்படுதல்,பெருந்தொற்றுகள் மற்றும் பட்டினி ஏற்படும் காலங்களில் கூட முற்றிலும் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலே உள்ளது எனக் கூறியுள்ளனர்.எனினும் ஆண்களுடன் ஒப்பீட்டளவில், குறைவான சுகாதார சுழற்சி காலங்களையே பெண்கள் கொண்டிருக்கின்றனர் என பெரினைஸ் பெனாயூன் என்ற பேராசிரியர் உறுதிப்படுத்தி உள்ளார்.வயது முதிர்ந்த காலத்தில், ஆண்களை விட பெண்கள் உடல் ரீதியாக துன்பங்களை எதிர்கொள்பவர்களாக உள்ளனர்.பெண்களின் வாழ்நாள் அதிகரிப்புக்கு மரபணு மாற்றங்கள், ஹார்மோன்கள், வாழ்க்கை முறை மற்றும் செயல்படும் முறை ஆகியவை முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன.

You may also like

Leave a Comment

error: Content is protected !!