ஆந்திர மாநிலம், டாக்டர் அம்பேத்கர் கோண சீமா மாவட்டம், மண்ட பேட்டையை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணா. விவசாயி. இவர் ஓங்கோல் இன பசு ஒன்றை வளர்த்து வருகிறார்.இந்த பசு கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்று ஈன்றது. இந்த பசு காலையில் 11 லிட்டர், மாலை 9 லிட்டர் பால் என தினமும் 20 லிட்டர் பால் கறந்து சாதனை படைத்து வருகிறது.கடந்த 2023-ம் ஆண்டு தாடே பள்ளிக்குடேமில் உள்நாட்டு பசும்பால் போட்டி நடந்தது. இதில் 5 வயதுடைய பசு ஒன்று 7 லிட்டர் பால் கறந்து முதல் பரிசை தட்டிச் சென்றது சாதனையாக இருந்தது.தற்போது முரளி கிருஷ்ணா வளர்த்து வரும் ஓங்கோல் பசு 20 லிட்டர் பால் கறந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. தரமான, சத்தான தீவனம் கொடுப்பதால் அதிக அளவில் பால் கொடுப்பதாக விவசாயி தெரிவித்தார்.