Home » ஆனமடுவில் ஒரு நாள் பாடசாலைக்கு வராததால் 7 வயது மாணவியை அடித்த அதிபர் மீது பொலிஸ் விசாரணை

ஆனமடுவில் ஒரு நாள் பாடசாலைக்கு வராததால் 7 வயது மாணவியை அடித்த அதிபர் மீது பொலிஸ் விசாரணை

by newsteam
0 comments
ஆனமடுவில் ஒரு நாள் பாடசாலைக்கு வராததால் 7 வயது மாணவியை அடித்த அதிபர் மீது பொலிஸ் விசாரணை

ஒரு நாள் பாடசாலைக்கு சமூகமளிக்காமையால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரை மரக் குச்சியால் தாக்கிய ஆனமடுவ கல்வி வலயத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபர் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.அதன்படி, தாக்குதல் நடத்திய அதிபர் குறித்து பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளனர்.இந்தத் தாக்குதலுக்கு ஆளானவர் கெடத்தேவ பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியாவார்.இந்தச் சம்பவத்தை எதிர்கொண்ட சிறுமி, முந்தைய நாள் பாடசாலைக்கு செல்லாததால் கோபமடைந்த அதிபர், அருகில் இருந்த மரக் குச்சியை எடுத்து பலமுறை தாக்கியதாகக் கூறி அவரது பெற்றோர், ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதன்படி, ஆனமடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ பிரேமதிலகவின் அறிவுறுத்தலின் பேரில், குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ. வன்னியாராச்சி உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!