Home » இந்தியாவில் மதுபோதையில் மனைவியின் மூக்கை கடித்து விழுங்கிய கணவன்

இந்தியாவில் மதுபோதையில் மனைவியின் மூக்கை கடித்து விழுங்கிய கணவன்

by newsteam
0 comments
இந்தியாவில் மதுபோதையில் மனைவியின் மூக்கை கடித்து விழுங்கிய கணவன்

மனைவியின் மூக்கை கணவன் கடித்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,இந்தியா, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தில் பெர்பாரா பகுதியில் 35 வயதுடைய பாபன் ஷேக் என்பவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக மது கதுன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.ஒரு நாள் அதை கடித்து சாப்பிட்டு விடுவேன்.தம்பதிகளுக்கு 8 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. பாபன் ஷேக் அடிக்கடி போதையில் வந்து தன்னுடைய மனைவியின் அழகை வர்ணித்துள்ளார்.குறிப்பாக தன் மனைவியின் மூக்கு அழகாக இருப்பதாகவும் ஒரு நாள் அதை கடித்து சாப்பிட்டு விடுவேன் என அடிக்கடி கூறியுள்ளார். சம்பவ நாளில் வழக்கம்போல் போதையில் வந்த பாபன் திடீரென அவருடைய மனைவியின் மூக்கை கடித்து மென்று சாப்பிட்டுள்ளார்.வலியால் அலறி துடித்த கதுன் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் வீட்டை விட்டு ஓடியுள்ளார். பின்னர் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்ற பிறகு தன் தாயாருடன் சேர்ந்து பொலிஸ் நிலையத்தில் கணவன் மீது புகார் கொடுத்துள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!