Home » இந்தியாவுடன் வரி விதிப்பில் பரஸ்பரம் – குண்டை தூக்கிப் போட்ட டிரம்ப்

இந்தியாவுடன் வரி விதிப்பில் பரஸ்பரம் – குண்டை தூக்கிப் போட்ட டிரம்ப்

by newsteam
0 comments
இந்தியாவுடன் வரி விதிப்பில் பரஸ்பரம் - குண்டை தூக்கிப் போட்ட டிரம்ப்

அமெரிக்க அதிபராக அடுத்த மாதம் பதவியேற்க இருக்கும் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு வரி விதிப்பது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் இந்தியா சில அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கிறது. இதனால் அமெரிக்காவும் இந்திய பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.”அவர்கள் எங்களுக்கு வரி விதித்தால், அவர்களுக்கு அதே அளவு வரி விதிக்கிறோம். அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு வரி விதிக்கிறோம். அனைத்து விதங்களிலும் அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கின்றனர், ஆனால் நாங்கள் அவர்களுக்கு வரி விதிப்பதில்லை,” என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய டிரம்ப், “பரஸ்பரம் என்ற சொல் மிக முக்கியமானது. இந்தியா எங்களுக்கு 100 சதவீதம் கட்டணம் வசூலித்தால், நாங்களும் அதுபோல் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கின்றோமா? அவர்கள் ஒரு சைக்கிளை அனுப்புகிறார்கள், நாங்கள் அவர்களுக்கு சைக்கிளை அனுப்புகிறோம். எங்களிடம் அவர்கள் 100 மற்றும் 200 வசூலிக்கின்றனர்.”இந்தியா, பிரேசில் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அவர்கள் எங்களுக்கு கட்டணம் விதிக்கின்றனர், அது பரவாயில்லை, ஆனால் நாங்களும் அவர்களுக்கு அதே கட்டணத்தை வசூலிக்க போகிறோம்,” என்று தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!