Wednesday, March 19, 2025
Homeஇந்தியாகாதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி 15 துண்டுகளாக வெட்டி டிரம்மில் போட்டு சிமெண்டால் அடைத்த...

காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி 15 துண்டுகளாக வெட்டி டிரம்மில் போட்டு சிமெண்டால் அடைத்த கொடூரம்

உத்தரப் பிரதேசம் மீரட் மாவட்டம் பிரம்மபுரியை சேர்ந்தவர் சவுரப் ராஜ்புத் (32 வயது). லண்டனை தளமாகக் கொண்ட வணிக கடற்படை அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முஸ்கான் ரஸ்தோகி என்ற பெண்ணை காதலித்து திருணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு தற்போது 5 வயதில் ஒரு மகன் உள்ளான். மனைவி, மகன் பிரம்மபுரியில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.லண்டனில் பணியாற்றும் சவுரப் ராஜ்புத் அவ்வப்போது இந்தியா வந்து தனது குடும்பத்துடன் இருப்பார். இதற்கிடையே சில காலம் முன்பு தனது மனைவி முஸ்கான், சாஹில் என்ற நபருடன் தகாத உறவில் இருந்தது தெரியவந்தது. இதனால் மனைவியை விவாகரத்து செய்து மகனை தானே வளர்க்க முடிவு செய்தார். ஆனால் குடும்பத்தினர் வற்புறுத்தலின் பேரில் குழந்தையின் எதிர்காலம் கருதி அந்த முடிவை கைவிட்டார்.

மேலும் தனது மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டார். அதன்பின் லண்டனுக்கு சென்ற அவர், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி மனைவி முஸ்கானின் பிறந்தநாள், பிப்ரவரி 28 ஆம் தேதி மகளின் பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டு கடந்த மாதம் சவுரப் ஊருக்கு திரும்பி வந்தார்.ஆனால் தனது மனைவி முஸ்கான் சாஹில் உடன் தகாத உறவை இன்னும் தொடர்வதை கணவன் சவுரப் அறிந்துகொண்டார்.அவர்களுக்கிடையேயான ஆபாச வாட்சப் உரையாடலையும் சவுரப் பார்த்துள்ளார். இதனால் இருவருக்குமிடையில் வாக்குவாதம் எழுந்தது. இந்நிலையில் கணவன் சவுரப்பை கொலை செய்ய முஸ்கான் தனது காதலுடன் சேர்ந்து திட்டம் தீட்டி கடந்த மார்ச் 7 ஆம் தேதி சவுரபுக்கு மயக்க மருந்து கொடுத்தார். அதன்பின் அவரது இதய பகுதியில் கத்தியால் பலமுறை ககுத்தி இருவரும் கொலை செய்தனர்.மேலும் திட்டமிட்டபடி சவுரபின் தலை 15 துண்டுகளாக வெட்டி அதை டிரம் ஒன்றில் போட்டு அதன் மீது சிமெண்டை ஊற்றி உலரவைத்துள்ளனர். அதன் பின் முஸ்கான் சிம்லாவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். சவுரப்பை காணவில்லை என அவரின் சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் தனது அண்ணனின் மனைவி முஸ்கான் மீதும் சந்தேகம் தெரிவித்தார்.

சவுரப்பின் வங்கிக் கணக்கில் ரூ.6 லட்சம் இருந்தது. முஸ்கானும் சாஹிலும் முதலில் அந்தப் பணத்தை எடுக்க முயன்றனர், ஆனால் அவர்களால் முடியவில்லை. இதற்குப் பிறகு முஸ்கான் சிம்லாவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று பணம் கேட்டுள்ளார்.கணவனை குறித்த அவர்களின் கேள்விக்கு மழுப்பலாக பதில் சொல்லியுள்ளார். இறுதியில் தான் கொலை செய்ததை பெற்றோரிடம் முஸ்கான் ஒப்புக்கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் நேற்று மதியம் அவரை பிரம்மபுரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முழு சம்பவத்தையும் போலீசாரிடம் தெரிவித்தனர்.இதனைத்தொடர்ந்து முஸ்கான் அளித்த வாக்குமூலத்தின்படி வீட்டில் டிரம்மில் சிமென்டில் உறைந்த சவுரபின் உடல் பாகங்களை பெறும் சிரமப்பட்டு போலீசார் மீட்டனர். தொடர்ந்து முஸ்கான் மற்றும் அவரது காதலன் சாஹிலை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படியுங்கள்:  வீட்டின் மாடியில் படித்துக்கொண்டிருந்த சிறுமியை கீழே தள்ளிவிட்டுக் கொன்ற குரங்குகள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!