கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பேருமலை பகுதியை சேர்ந்தவர் அபான் (23). இவர் நேற்று இரவு வெஞ்ஞாரமூடு காவல் நிலையத்திற்குச் சென்றார். தனது தாய், சகோதரன், காதலி உள்பட 6 பேரை தான் கொலை செய்துவிட்டதாக அபான் கூறினார்.பேருமலையில் 3 பேரையும், சுள்ளாளத்தில் 2 பேரையும், பாங்கோட்டில் ஒருவரையும் சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டதாக கூறினார். மேலும், தான் விஷம் குடித்து விட்டதாகவும், வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டரை திறந்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.இதை கேட்டு அதிர்ந்த போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்ந்தவிட்டு அவர் கூறிய இடங்களுக்கு சென்று 5 பேர் கொல்லப்பட்டதை உறுதி செய்தனர். அபானுடைய தாய் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.
கொலைகளை செய்த அபானுடைய குடும்பம் பேருமலை பகுதியை சேர்ந்தது. இவரது தந்தை ரஹீம். தாய் ஷெமி. இளைய சகோதரன் அப்சான் (வயது 13). தந்தை ரஹீம் அரபு நாடு ஒன்றில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.அபான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அங்கு சென்று தந்தைக்கு தொழிலில் உதவியாக இருந்தார். கொரானாவுக்கு பின் அபான் கேரளா திரும்பி வந்தார். ரஹீம் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மகன் அபான் தனியாக தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளார்.
அபானின் 88 வயது பாட்டி சல்மாபீவி பாங்கோட்டில் வசித்து வந்தார். அபானின் சித்தப்பா லத்தீப், சித்தி ஷாகிதாஇருவரும் சுள்ளாளத் பகுதியில் வசித்து வந்தனர். அபானின் காதலி பசானா கல்லூரியில் படித்து வந்தார்.அபானின் தந்தைக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அபான் தனியாக தொழில் தொடங்கவும் நினைத்துள்ளார். மேலும், அபான் தனது காதலி பசானாவுக்கு கடந்த சில நாட்களுக்குமுன் புதிய வீடு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இதனால் அபான் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இதை சமாளித்து புதிதாக தொழில் தொடங்க தனது பாட்டி மற்றும் சித்தப்பாவிடம் பணம் கேட்டுள்ளார் அபான்.
ஆனால் பணம் தர மறுத்த அவர்கள், காதலிக்கு வீடு வாங்கி கொடுத்ததையும் கண்டித்துள்ளனர். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தொடர் அழுத்தத்தில் இருந்த அபான் நேற்று மாலை சுத்தியலை எடுத்துக்கொண்டு அனைவரையும் கொலை செய்ய தனது பைக்கில் கிளம்பியுள்ளார்.முதலில் பாங்கோட்டில் உள்ள பாட்டி சல்மாபீவியின் வீட்டிற்கு சென்று அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்தார். அடுத்து சுள்ளாளத் பகுதியில் உள்ள சித்தப்பா வீட்டிற்கு சித்தப்பா லத்தீப், சித்தி ஷாகிதாவையும் சுத்தியலால் அடித்துக் கொன்றார்.அடுத்ததாக காதலி பசானாவின் வீட்டிற்கு சென்ற அபான் அவரை பைக்கில் அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார்.ஆத்திரம் அடங்காத அப்சாம் வீட்டில் தயார் தாயார் ஷெமி, தம்பி அப்சானை சுத்தியலால் தாக்கினார். மாடி அறைக்கு சென்று காதலி பசானாவையும் சுத்தியலால் அடித்தார். தம்பியும், காதலியும் ரத்த வெள்ளியதில் உயிரிழக்க, தாயார் படுகாயங்களுடன் மயங்கினார்.
அனைவரும் உயிரிழந்ததாக நினைத்து வீட்டில் கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள விஷம் அருந்தியுள்ளார். அதன்பின் ஆட்டோவில் வெஞ்ஞாரமூடு போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.அப்சான் வீட்டுக்கு வந்த போலீசார் தயார் ஷெமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெவ்வேறு இடங்களில் இருந்த மற்ற ஐவரின் உடல்கள் மீட்கப்பட்டன. விஷம் குடித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அப்சான் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடந்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.