ஆட்டோக்களில் வித்தியாசமான வடிவமைப்பு, வித்தியாசமான வாசகங்கள் போன்றவைகளை டிரைவர்கள் எழுதி இருப்பதை பார்க்க முடியும். இது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாவது உண்டு.அது போன்று ஒரு ஆட்டோ டிரைவரின் அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில நேரங்களில் இளம் ஜோடிகள் ஆட்டோவில் பயணிக்கும் போது கூட எல்லை மீறுவதை தடுக்கும் வகையில் அந்த டிரைவரின் அறிவிப்பு உள்ளது.
இது தொடர்பாக அன்யா என்ற பயனர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் ஆட்டோவில் பின்புறத்தில் அமர்ந்து பயணித்த காட்சி உள்ளது. அவரது இருக்கையின் பின்புறத்தில் டிரைவரின் எச்சரிக்கை அறிவிப்பு இருந்தது. அதில், இது உங்கள் தனிப்பட்ட இடம் அல்ல. எனவே தயவு செய்து அமைதியாக இருங்கள், மரியாதை கொடுங்கள் என எழுதி வைக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் வைரலாகி ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.