டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரியாத்தில் இருந்து வந்த இரண்டு பயணிகளை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.சோதனையின் போது, பயணிகளின் ஜட்டிகள் ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடை இருப்பதை கண்டு விமான நிலைய அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர்.பின்னர் அவர்களின் ஜட்டியில் ரகசிய பாக்கெட்டில் இருந்து சுமார் 931.37 கிராம் எடை கொண்ட தங்கப் பசை அடங்கிய மூன்று பைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய சந்தையில் இதன் மதிப்பு தோராயமாக ரூ.68.93 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.