அசாம் மாநிலத்தின் கலாசார நடனமாக பிகு உள்ளது. பண்டிகையின்போது பாரம்பரிய உடையணிந்து வாலிபர்களும் இளம்பெண்களும் இணைந்து பிகு நடனம் ஆடுவார்கள். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிரியங்கா. பிகு நடன கலைஞரான இவர் தனது நடன வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பிரபலமாக உள்ளார்.இந்தநிலையில் பிரியங்கா புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது குழந்தையுடன் இணைந்து அவர் பிகு நடனமாடினார். பாரம்பரிய உடையணிந்த அந்த குழந்தை துள்ளலான இசைப்பாடலுக்கு தனது தாயுடன் சேர்ந்து கைகளை காற்றில் அசைத்தும் துள்ளி குதித்தும் உற்சாகமாக நடனமாடியது.தாய்க்கு நிகராக ஈடுபாடுடன் ஆடிய அந்த குழந்தையை சமூக வலைத்தளவாசிகள் பாராட்டி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.