தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆம் ஆண்டுக்கான ஆரம்ப விழா இன்று நடைபெறுகிறது.இந்த விழா மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நடைபெறுகிறது.2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கிய தனது சுற்றுப்பயணம் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை இந்த விழாவில் வெளியிடுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்தும், வலியுறுத்தியும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.