Saturday, February 22, 2025
Homeஇந்தியாமகளின் திருமணத்தில் மாரடைப்பால் சரிந்த தந்தை - பரிதாப பலி

மகளின் திருமணத்தில் மாரடைப்பால் சரிந்த தந்தை – பரிதாப பலி

புதுமணத் தமபதிகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு மீதி திருமண சடங்குகளும் நடத்தி முடிக்கப்பட்டது.
தெலுங்கானாவில் மகளின் திருமணம் முடிந்ததும் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
தெலுங்கானாவின் கம்மாரெட்டி மாவட்டத்தின் பிகானர் பகுதியில் உள்ள ராமேஷ்வர்பள்ளி கிராமத்தில் வசித்தவர் பாலசந்திரம்(56). இவரது மூத்த மகளின் திருமணம் பிக்கனரில் ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.நேற்று திருமணச் சடங்குகளின் ஒரு பகுதியாக, கன்னியாதானம் சடங்கின்போது அவர் தனது மகளின் கால்களைக் கழுவினார். அதன்பின் சில நிமிடங்களில் அவர் திடீரென மாரடைப்பால் சரிந்தார்.திருமண மண்டபத்தில் இருந்த குடும்ப உறுப்பினர்களும் மற்றவர்களும் உடனடியாக பாலசந்திரத்தை கம்மாரெட்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சென்றடைந்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.இந்த துயர சம்பவம் உறவினர்களையும் திருமணத்தில் கலந்துகொண்டவர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் புதுமணத் தமபதிகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு மீதி திருமண சடங்குகளும் நடத்தி முடிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:  உணவு பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட திருமணம் கடைசியில் நடந்த Twist
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!