ஐதராபாத்தில் மனைவியை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பிரஷர் குக்கரில் வேக வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.35 வயதுடைய தனது மகள் ஒருவாரமாக காணவில்லை என்று பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கிய போலீசாருக்கு பெண்ணின் கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. சம்பவத்தன்று அவருக்கும், அவரது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் மனைவியை கொன்று அவரது உடல் பாகங்களை பிரஷர் குக்கரில் வேக வைத்து அதன்பின் ஏரியில் வீசியதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அந்த நபர் கூறியதன் உண்மை தன்மை குறித்து விசாரித்து வருகின்றனர்.கைதான நபர் ராணுவ வீரராக இருந்தவர் என்றும் தற்போது காவலராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.