மாட்டின் வயிற்றில் 70 கிலோ பிளாஸ்டிக்

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், எமிகானூரில் பசுமாடு ஒன்று வயிறு பெருத்தபடி அவதி அடைந்து சாலையோரம் படுத்து கிடந்தது. இதனைக் கண்ட வக்கீல் திம்மப்பா என்பவர் கால்நடை வைத்தியர்களுக்கு தகவல் தெரிவித்தார்.கால்நடை வைத்தியர்கள் மாட்டை மீட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். மாட்டை பரிசோதனை செய்ததில் அதன் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வைத்தியர்கள் அறுவை சிகிச்சை மூலம் மாட்டின் வயிற்றில் இருந்து 70 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை வெளியே எடுத்தனர். தற்போது மாடு ஆரோக்கியத்துடன் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here