Sunday, January 5, 2025
Homeஇந்தியாமாரடைப்பால் இறந்தவர்: வேகத்தடையால் உயிர் பிழைத்த அதிசயம்

மாரடைப்பால் இறந்தவர்: வேகத்தடையால் உயிர் பிழைத்த அதிசயம்

மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் கசாபா-பவடா பகுதியைச் சேர்ந்தவர் பாண்டுரங் உல்பே (65). கடந்த டிசம்பர் 16-ம் தேதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.பரிசோதித்த டாக்டர்கள், அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவித்ததல் உல்பே குடும்பத்தினர் சோகமடைந்தனர்.
அதன்பின், அவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டனர். வீட்டில் இறுதிச்சடங்குகள் தயாராகி கொண்டிருந்தன.வீட்டுக்குச் செல்லும் வழியில் வேகத்தடை ஒன்றில் ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியது. அப்போது உல்பேவின் விரல்கள் அசைந்தன. இதைக் கண்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அவருக்கு உயிர் இருக்கிறது என நம்பினர்.

இதையடுத்து, உல்பேவை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 வாரம் வரை மருத்துவமனையில் அவர் தங்க வைக்கப்பட்டார். ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் அவர் குணமடைந்து உடல்நலம் தேறியுள்ளார்.இந்நிலையில், உல்பே சிகிச்சை முடிந்து கடந்த திங்கட்கிழமை அவரது வீட்டுக்கு நடந்தே சென்றார்.வேகத்தடை வழியே ஆம்புலன்ஸ் சென்றதில் உல்பே உயிர் பிழைத்து இன்று குடும்பத்தினருடன் ஒன்றாக வாழ்ந்து வருவது அப்பகுதி மக்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments