இப்படி தேவையற்ற யோசனைகளை யாரும் செயல்படுத்தாதீர்கள் என்று பலரும் கருத்துகளை பதிவிட்டனர்.
சமூக வலைத்தளங்களில் எளிய தீர்வுகள் என்ற பெயரில் ஏராளமான யோசனைகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் பல பயனளிப்பதில்லை என்பதை அனுபவத்தில்தான் உணர முடியும். அப்படி ஒரு பெண், எளிமையான முறையில் முடியை நேராக்க யுத்தி சொல்வதாக கூறி, ஆபத்தை சந்தித்தார்.அவர் வீட்டில் சமையல் அறையில் பயன்படுத்தும் இரும்பு இடுக்கியைக் கொண்டு முடியை நேராக்கலாம் என்ற யோசனையை செயல்படுத்தினார். இரும்பு இடுக்கியை அடுப்பில் சூடாக்கிவிட்டு அதை முடியை நேராக்கும் எலக்ட்ரிக் கருவி போல பயன்படுத்த முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சி சோதனையில் முடிந்தது. சூடான இடுக்கி முடியை நேராக்குவதற்குப் பதிலாக கத்தையாக முடியை துண்டாக்கிவிட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் பதற்றம் அடைந்தபடியே இடுக்கியை மீண்டும் நெருப்பில் காட்ட, கத்தரிக்கப்பட்ட முடி பற்றி எரியத் தொடங்கியது. பதறிப்போன அவர், அதை தூக்கிப்போட்டதும் வீடியோ முடிவடைகிறது.
இதையும் படியுங்கள்: கட்டுப்பாடுகளுடன் கஞ்சா செடியை வளர்க்க இமாச்சலப் பிரதேச அரசு அனுமதி
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வலைத்தளவாசிகளிடம் சிரிப்பை வரவழைத்தது. இப்படி தேவையற்ற யோசனைகளை யாரும் செயல்படுத்தாதீர்கள் என்று பலரும் கருத்துகளை பதிவிட்டனர். வீடியோ 3½ லட்சம் பேரின் விருப்பங்களை பெற்றதோடு, மேலும் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது.