கர்நாடகாவில் கோழிப்பண்ணைக்குள் நுழைந்த ராஜ நாகத்துடன் பிட் புல் வகை வளர்ப்பு நாய் ‘பீமா’ போராடி சண்டையிட்டு, தனது உயிரை கொடுத்து உரிமையாளரின் குடும்பத்தினரை காப்பாற்றியுள்ளது.ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஷமந்த் கவுடா என்பவரின் பண்ணை வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பண்ணை வீட்டில் உள்ள கோழிப்பண்ணையில் 12 அடி நீள ராஜநாகம் நுழைந்துள்ளது. அந்த இடத்தில் ஷமந்த் கவுடாவின் குழந்தை விளையாடி வந்துள்ளது. ராஜ நகத்தை கவனித்த வளர்ப்பு நாய் ‘பீமா’ ராஜநாகத்துடன் சுமார் 40 நிமிடங்கள் சண்டையிட்டு 10 துண்டுகளாக குதறி கொன்றது. இந்த சண்டையில் விஷம் ஏறி ‘பீமா’ உயிரிழந்தது.வளர்ப்பு நாய் ‘பீமா’ குறித்து பேசிய அதன் உரிமையாளர், “பாம்புகளுடன் சண்டையிடுவது பீமாவுக்குப் புதிதல்ல. இந்த தோட்டத்தில் புகுந்த சுமார் 15 விஷ பாம்புகளை பீமா கொன்றுள்ளது” என்று தெரிவித்தார்.