உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நாகா பகுதியில் உள்ள ஷரன்ஜித் என்ற ஹோட்டல் விடுதி அறையில் வைத்து 24 வயது இளைஞன் தனது தாய் மற்றும் நான்கு சகோதரிகளை இன்று படுகொலை செய்துள்ளான்.ஹோட்டல் ஊழியர்களின் கூற்றுப்படி, டிசம்பர் 30 அன்று அந்த குடும்பம் ஹோட்டலில் அறையெடுத்து தங்கியுள்ளது .
குற்றம் சாட்டப்பட்டவர், ஆக்ராவின் குபேர்பூரை சேர்ந்த அர்ஷத். தனது தாய் மற்றும் 4 சகோதரிகளை விடுதிக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து சுயநினைவை இழக்கச்செய்து அவர்களின் கை மணிக்கட்டை அறுத்து கொன்றுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், ஹோட்டல் அறையில் இருந்து 5 பேரின் உடல்களை மீட்டனர்.இறந்தவர்கள் அலியா (9), அல்ஷியா (19), அக்சா (16) மற்றும் ரஹ்மீன் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் அனைவரும் அர்ஷத்தின் சகோதரிகள். ஐந்தாவது உடல் தாயார் அஸ்மா உடையது. அவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் காவல்துறை உடனடியாக குற்றம் நடந்த இடத்தில் இருந்து அர்ஷத்தை கைது செய்தது என்று டிசிபி ரவீனா கூறினார்.மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டு, தடயவியல் குழுக்கள் குற்றம் நடந்த இடத்தில் சாட்சியங்களைச் சேகரித்து வருவதாக ரவீனா கூறினார்.சமபவத்தின் பின் தலைமறைவான அர்ஷத்தின் தந்தையை போலீஸ் தேடி வருகிறது. குடும்பத் தகராரே கொலைக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையை செய்த பின், குற்றவாளி அர்ஷத் வீடியோ ஒன்றையும் எடுத்துள்ளார். வீடியோவில் இறந்த தாய் மற்றும் சகோதரிகளைக் காட்டினார். இதன் போது அவருடன் அவரது தந்தையும் இருந்தார்.என் பெயர் ஆசாத் இன்று, குடிசைவாசிகளின் [அக்கபக்கத்தினரின்] நிர்ப்பந்தத்தால், இந்த நடவடிக்கையை எடுத்தோம். தாயையும் சகோதரிகளையும் என் கைகளால் கொன்றேன். இதற்கு, எங்கள் காலனியில் வசிப்பவர்களே பொறுப்பு. எங்களுடைய வீட்டைப் பறிப்பதற்காக இவர்கள் எத்தனையோ அட்டூழியங்களைச் செய்தார்கள். நாங்கள் குரல் எழுப்பியபோது, யாரும் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. யோகி ஜிக்கு [முதல்வருக்கு] ஒரு வேண்டுகோள், இது போன்றவர்களை விட்டுவிடாதீர்கள், மரணத்திற்கு முழு காலனியும் பொறுப்பு.இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் ராணு என்கிற அஃப்தாப் அகமது, அலீம் கான், சலீம் கான், டிரைவர் அகமது, அசார் மற்றும் சிறுமிகளை விற்கும் அவரது உறவினர்கள். எங்களை சிறைக்கு அனுப்பவும், சகோதரிகளை விற்கவும் இவர்கள் திட்டம் தீட்டினர். நாங்கள் இதை எதிர்த்தோம். காவல்துறையிடம் உதவி கேட்டேன், தலைவர்களிடம் உதவி கேட்டேன், ஆனால் யாரும் எதுவும் செய்யவில்லை.நாங்கள் படவுன் குடியிருப்பாளர்கள். எங்களை வங்கதேசத்தினர் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் படவுனில் வசிக்கும் எங்கள் அத்தையிடம் இருந்து நீங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.. நாங்கள் மதம் மாற விரும்பினோம். இன்று என் சகோதரிகள் அனைவரும் இறந்து கொண்டிருக்கிறார்கள். நானும் இறப்பேன்.
பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஜி எல்லா முஸ்லிமும் ஒரே மாதிரி இல்லை. இந்தியாவில் எந்த குடும்பமும் இதை மீண்டும் செய்யக்கூடாது. உயிருடன் இருக்கும் போது இல்லை என்றால் இறந்த பிறகு நீதி வழங்குங்கள். நீங்கள் ஒரு உண்மையான இந்து மற்றும் தாக்கூர். எனவே எனது வீட்டில் கோயில் கட்ட வேண்டும்.காலனி மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளனர். பல ஏழைகளின் பெண் குழந்தைகளை இவர்கள் தூக்கிச் சென்று விற்கின்றனர். காவல்துறையினரிடம் பணம் கொடுத்து அமைதிப்படுத்துகிறார்கள்.எனது குடும்பத்தின் உடல்களை எரிப்பதா அல்லது புதைப்பதா என்பது உங்கள் விருப்பம். நான் அவர்களை கொடூரமாக கொன்றேன். கூப்பிய கைகளுடன் நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களைச் சந்திக்க லக்னோ வந்தேன். ஆனால் சந்திக்க முடியவில்லை என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.