தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்காக தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பும் மக்களுக்கான போக்குவரத்து சேவைகள் இன்றும் முன்னெடுக்கப்படுகின்றன.நேற்றும் ஏராளமான மக்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்வதற்காகக் கொழும்பு புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையம் மற்றும் கோட்டை தொடருந்து நிலையம் ஆகியவற்றில் வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.இந்தநிலையில், புத்தாண்டுக்காக சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட தொடருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.இதன்படி, 10 விசேட தொடருந்து சேவைகள் இயக்கப்படுவதாகத் தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.