Home » இன்று முதல் அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு தடை

இன்று முதல் அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு தடை

by newsteam
0 comments
இன்று முதல் அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு தடை

அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமுலுக்குவரும் நிலையில், தனது சேவைகளை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டொக் செயலிக்கு எதிராக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.குறித்த சட்டத்தின்படி, இன்றைய தினத்திற்குள் அந்த செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்பனை செய்யாவிட்டால் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டொக் செயலியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், அந்நாட்டு அரசியலமைப்பை மீறும் வகையில் உள்ளதாகக் கூறி, டிக்டொக் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது.அத்துடன் கருத்து சுதந்திரத்திற்கு எதிராகக் குறித்த சட்டம் உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தது.இந்தநிலையில் குறித்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், இந்த சட்டம் அரசமைப்பை மீறும் வகையில் இல்லை என தெரிவித்தது.இதற்கமைய இன்று முதல் அமுலுக்குவரும் நிலையில், தனது சேவைகளை நிறுத்துவதாக டிக்டொக் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!