இன்றைய ராசிபலன் 01.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 18, புதன் கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம் ராசியில் விசாகம், அனுஷம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். உங்கள் வேலையில் சிறப்பாக செயல்பட்டு மரியாதை அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனைவியின் உடல் நலனில் கவனம் தேவை.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று. குடும்ப பொறுப்புக்கள் நிறைவேற்றுவதில் மும்முரமாக இருப்பீர்கள். இன்று பணியிடத்தில், குடும்பத்திலும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இன்று நிதிநிலை சிறப்பாக இருக்கும். பணம் தொடர்பாக முன்னேற்றம் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் திறமையையும், கடின உழைப்பையும் காட்டுவீர்கள். உங்களின் மரியாதை அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்களின் சிறப்பான செயல்பாடு மன அமைதியை தரும். வீடு மனை தொடர்பான விஷயங்களில் சில மன வருத்தம் தரக்கூடிய சூழல் இருக்கும். பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று புதிய வேலையை தொடங்க நினைப்பவர்களுக்குச் சாதகமான சூழல் இருக்காது. இன்று புதிய முதலீடு, திட்டங்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தவும். குடும்பத்தில் கருது வேறுபாடுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் உடல் நலம் குறித்து கவலை ஏற்படும். அவரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். ஆரோக்கியம் சற்று பிரச்சனை தந்தாலும் வேலையை சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆரோக்கியத்தைப் பராமரிக்க உணவு விஷயத்தில் அக்கறை செலுத்தவும். வாழ்க்கைத் துணையுடன் கருதி வேறுபாடுகள் ஏற்படும். இன்று குடும்பத்திலும், பணியிடத்திலும் பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பதோடு, வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் திட்டமிட்ட செயல்கள் சிறப்பான வெற்றியை தரும். அதன் மூலம் மனம் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் தொடர்பாக பணம் முதலீடு செய்ய சாதகமான சூழல் நிலவும். இன்று நிதி நன்மைகள் உண்டாகும். ஆன்மீகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். இன்று சிக்கலான நேரத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வீடு, மனை, நிலம் தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அது தொடர்பான மூலங்களில் இருந்து லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்று குடும்ப உறுப்பினர்களையும், அக்கம் பக்கத்தினரின் அனுசரித்துச் சொல்ல வேண்டிய நாள். கடினமான சூழலில் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு இன்று சாதகமான நாளாக அமையும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று கொஞ்சம் தொந்தரவு தரக்கூடிய மனநிலை இருக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும். உடல் நலனில் பலவீனமாக உணருவீர்கள். இன்று சில சோகமான செய்திகள் கிடைக்கும். உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யவும். கடினமான நேரம் நாள் என்பதால் எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செய்வது நல்லது.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சில விரும்பத்தகாத சம்பவங்கள், செய்திகள் கிடைக்க சாத்தியம் உண்டு. இன்று நீங்கள் மன அழுத்தம் எதிர்கொள்ள வாய்ப்பு உண்டு. தேவையற்ற மன சஞ்சலம் ஏற்படும். இன்று உங்களிடம் இருந்து மன சஞ்சலம், பயம் குறைந்து மன அமைதி ஏற்படும். திருமண உறவில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் விட்டுக் கொடுத்த செல்வது அவசியம்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் செய்யக்கூடிய தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். அது தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. வணிகம் தொடர்பான விஷயங்களில் நன்மை உண்டாகும். பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவை பெறுவீர்கள். வாழ்க்கை துணையிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்புகள் ஏற்படும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். தொழில் தொடர்பாக பெரிய லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி மன அமைதி கிடைக்கும். இன்று எல்லா விஷயங்களையும் நிதானமாக செயல்படுவதோடு, கடின உழைப்புடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சோதனை தரக்கூடிய நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை உங்களுக்கு கவலை அதிகரிக்கும். தொழில் தொடர்பாக சற்று தொந்தரவு தரக்கூடிய நாடு. அன்புக்குரியவர்களுடன் கருத்து வேறுபாடு, தகராறுகள் ஏற்படும். இன்று எதிலும் விட்டுக் கொடுத்த செல்ல வேண்டிய நாள். முக்கிய விஷயங்கள் பெரியவர்களின் ஆலோசனை பெறுவது நல்லது.