இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், தனுசு ராசியில் உள்ள கேட்டை, மூலம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். பிள்ளைகள் தொடர்பாக கவலை ஏற்படும். உங்கள் வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிக்க முயற்சி செய்யவும். பணப்பரிவர்த்தனை விஷயத்தில் கவனம் தேவை. புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று ஆளுமை திறன் மேம்படும். சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய சூழல் இருக்கும். காதல் உறவில் நெருக்கம் அதிகரிக்கும். இன்று சில விஷயங்களால் மன அழுத்தம் மற்றும் சோர்வாக உணர்கிறீர்கள். அலுவலக வேலைகளை கச்சிதமாக செய்து முடிக்க முயற்சிக்கவும். பிறரின் உணர்வுகளை புரிந்து செயல்படவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். காதல் விஷயத்தை துணையின் உணர்வுகளை மதித்து செயல்படவும். தொழில் தொடர்பாக ஆபத்தான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் படிப்பில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் தேவை. வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களை சுற்றியுள்ள சூழல் இனிமையாகவும் சாதகமாகவும் இருக்கும். அனுபவங்கள் மற்றும் நினைவுகள் இனிமையான பலன் தரக்கூடியதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு சிறப்பாக இருக்கும். இது உங்கள் திருமண வாழ்க்கையை மேம்படுத்தும். இன்று பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை. வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மன நிம்மதி கிடைக்கக்கூடிய நாள். பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வமாக இருப்பீர்கள். நண்பர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களின் வருமானத்தை அதிகரிக்க சில நல்ல வாய்ப்புகள் பெறுவீர்கள். பிறரிடம் சிக்கி உள்ள பணம் திரும்ப கிடைக்கும். வணிகத் திட்டங்களை ரகசியமாக பார்த்துக் கொள்ளவும். இன்று முக்கிய முடிவுகள் இருக்கும் முன் அனுபவசாலிகளின் ஆலோசனை பெறுவது நல்லது.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான பலன் கிடைக்கக் கூடிய நாள். உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் சஞ்சலமான சூழல் இருக்கும். பொய்யர்களிடமிருந்து விலகி இருக்கவும். காதல் வாழ்க்கையில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உங்களின் கடினமான உழைப்பால் பெரிய நன்மைகளை பெறுவீர்கள். தொழில் தொடர்பாக லாபகரமான சூழல் உருவாகும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சற்று பலவீனமாக உணர்வீர்கள். நீங்கள் முடிக்க நினைத்த வேலையை முடிப்பதில் இழுபறி ஏற்படும். வேலை தொடர்பாக முன்னேற்றம் ஏற்படும். பல இடங்களிலிருந்து பணத்தை பெற வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் உங்கள் முயற்சிக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். இளைஞர்கள் பயனற்ற செயல்களில் கவனத்தை செலுத்துவதை தவிர்க்கவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான பலன் கிடைக்கக் கூடிய நாள். பிறரின் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். இன்று உங்களின் கடமை, பொறுப்புக்களை சிறப்பாக செய்வீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். குடும்பத் தொழிலில் துணையின் ஆலோசனை தேவைப்படும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிக சிறப்பான பலன் கிடைக்கக் கூடிய நாள். நீதிமன்ற வழக்கு தொடர்பாக வெற்றி பெறுவீர்கள். உங்களின் கருத்துக்களை முன்வைக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள். பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவது, பரஸ்பர உறவை வலுப்படுத்த முயற்சிக்கவும். திருமண வாழ்க்கையில் காதல் நிறைந்திருக்கும். எந்த ஒரு முதலீடு செய்வதற்கு முன் பலமுறை யோசிக்கவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். இன்று உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் சிறப்பாக செயல்படுவார்கள். இன்று உங்களின் செலவுகள் அதிகமாக இருக்கும். உங்களின் உடல் நலம் குறித்து கவலைப்படுவீர்கள். குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. இன்று வேடிக்கையான விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான பலன் அளிக்கக்கூடிய நாள். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் வாழ்க்கை துணையை அனுசரித்து செல்லவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனை ஏற்படும். அது தொடர்பான முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். சொத்து வாங்கும் கனவு விரைவில் நிறைவேறும். வணிக ரீதியாக உங்களுக்கு சாதகமான பலன்களை கிடைக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் பயனுள்ள நாளாக அமையும். உங்கள் பிடிவாதத்தை தவிர்ப்பது அவசியம். திருமணம் தொடர்பாக நல்ல வரன் கிடைக்க வேண்டும். காதல் உறவில் அதிர்ஷ்டசாலியாக உணர்வீர்கள். திருமணம் ஆனவர்களுக்கு துணையின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்கள் வேலைகளை முடிப்பதிலும் முழு கவனம் தேவை. பணியிடத்தில் வேலைகளை சரியாக முடிக்க முயற்சிக்கவும்.