இன்று புதன்கிழமை 4 ஜூன் 2025, கன்னியில் சந்திரன், ரிஷபத்தில் குருவின் அமைப்பால் கஜகேசரி யோகம் உருவாகிறது. உத்திர நட்சத்திரத்தில் நட்சத்தில் சந்திரனின் சஞ்சாரம் மிதுனம், சிம்மம் உள்ளிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். துர்க்கையின் அருளால் 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முக்கியமான வேலைகள் சரியான நேரத்தில் முடிக்க முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்கள் நற்பெயர் உயரும். அதிகாரிகள் உங்கள் வேலையை பாராட்டுவார்கள். நீங்கள் வெகுமதி பெறலாம். மற்றவர்கள் சொல்வதை அப்படியே நம்ப வேண்டாம்.
ரிஷபம் ராசி பலன்
இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். வீட்டு செலவுகள் அதிகரிக்கலாம். அதனால், நீங்கள் அதை கட்டுப்படுத்த முயற்சி செய்யவும். குழந்தைகளுக்கு பொறுப்புகளை கொடுத்தால், அவர்கள் அதை சரியாக செய்வார்கள். வருமானம் மற்றும் செலவை சமமாக கையாள வேண்டும். இல்லையென்றால், நிதி சூழல் குழம்பமாகலாம். உங்கள் நல்ல குணத்தால் அனைவரின் மனதையும் வெல்வீர்கள். அதனால், குடும்பத்தினர் உங்களுக்கு பெரிய பொறுப்புகளை கொடுக்கலாம்.
மிதுனம் ராசி பலன்
இன்று வேலை, குடும்பம் தொடர்பாக உங்களுக்கு சில பிரச்சனைகள் வரலாம். எந்த வேலையிலும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டினால், எதிர்காலத்தில் லாபம் கிடைக்கும். அரசாங்க திட்டங்களில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தால், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் முடிவு எடுப்பது நல்லது. நண்பர்களுடன் வெளியில் செல்ல திட்டம் போடலாம்.
கடகம் ராசி பலன்
இன்று உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் நாள். புதிய நபர்களை சந்திப்பீர்கள். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள். குடும்பத்தில் பிரச்சனை வரலாம். குடும்ப உறுப்பினர்களிடம் கடினமான வாக்குவாதங்கள் செய்ய நேரிடலாம். வியாபாரத்தில் யாரையும் நம்ப வேண்டாம். ஏமாற வாய்ப்புள்ளது.
சிம்மம் ராசி பலன்
இன்று உங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபார விஷயமாக பயணம் செய்ய வேண்டி வரலாம். வாகனம் பழுதால் செலவுகள் அதிகரிக்கலாம். நண்பர் ஆலோசனை சொன்னாலும், முழுமையாக விசாரித்த பிறகே அது தொடர்பான வேலையை ஆரம்பிக்கவும். வாழ்க்கைத் துணைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம் என்பதால், கவனக்குறைவாக இருக்க வேண்டாம். சிலருடன் கூட்டு சேர்ந்து எந்த வேலையும் செய்வது நல்லது.
கன்னி ராசி பலன்
இன்று நீங்கள் நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க நேரம் ஒதுக்குவீர்கள். ஒரு பிரச்சனையால் தனிமையாக உணர்வீர்கள். பெற்றோரிடம் பேசி தீர்வு காண முயற்சி செய்யுங்கள். தேவையற்ற கவலைகள் உங்களை தொந்தரவு செய்யும். அது உங்கள் இயல்பிலும் தெரியும். நீங்கள் செய்யும் எந்த ஒரு வேலையில் உங்களுக்கு பிரச்சனை ஏற்படலாம். அதற்கு உங்கள் சக ஊழியர்களிடம் உதவி கேட்கலாம். முன்பு யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், அது திரும்ப கிடைக்கலாம்.
துலாம் ராசி பலன்
இன்று மாணவர்களுக்கு நல்ல நாள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவீர்கள். வேலை செய்பவர்களுக்கு பல வேலை வாய்ப்புகள் வரலாம். ஆனால், முடிந்த வரை பழைய வேலையிலேயே இருப்பது நல்லது. எதிர்மறை எண்ணங்களை மனதில் வந்து செல்லும்.
விருச்சிகம் ராசி பலன்
இன்று மற்ற நாட்களை விட உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். பண பரிவர்த்தனையில் கவனமாக இருங்கள். இன்று யாரிடமும் கடன் வாங்க வேண்டாம். குடும்பத்தில் திருமண தடை நீங்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு பெரிய தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பெரிய பதவி கிடைக்கலாம். பழைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
தனுசு ராசி பலன்
இன்று உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கலாம். வியாபாரம் செய்பவர்கள் கவனமாக ஒப்பந்தங்களை பேச வேண்டும். பணியிடத்தில் தவறான விஷயத்திற்கு யாரோ சொல்வதற்காக தலையாட்ட வேண்டாம். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு பரிசு வாங்கி கொடுக்கலாம். அதனால், தம்பதி இடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். இன்று உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் இருந்து ஓட வேண்டாம். அதை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.
மகரம் ராசி பலன்
இன்று உங்களுக்கு சாதாரணமான நாளாக இருக்கும். உங்கள் மனதிலுள்ள விஷயங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம். ஏமாற வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் சண்டை போட வேண்டாம். அவர்கள் சொல்வதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். அங்கு சில முக்கியமான நபர்களை சந்திப்பீர்கள்.
கும்பம் ராசி பலன்
இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் தங்கள் துணையுடன் பிடித்த இடத்திற்கு வெளியில் செல்ல திட்டம் போடுவார்கள். நண்பரின் ஆலோசனையின் பேரில் பெரிய முதலீட்டு திட்டத்தில் சேர வேண்டாம். அதனால் பிரச்சனை வரலாம். நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசை இன்று நிறைவேறும். உங்கள் குடும்பத்தில் பூஜை, புனஸ்காரம் போன்றவற்றை நடக்க வாய்ப்பு உண்டு.
மீனம் ராசி பலன்
இன்று உங்களுக்கு ஏமாற்றம் தரும் நாளாக இருக்கும். அக்கம் பக்கத்தில் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பிரச்சனை வரலாம். தூரத்தில் இருக்கும் உறவினரிடம் இருந்து கெட்ட செய்தி வரலாம். சூதாட்டம் அல்லது லாட்டரியில் பணம் போடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பணம் இழக்க நேரிடலாம். அதே சமயம், யாராவது கஷ்டப்படுபவருக்கு உதவி செய்ய வாய்ப்பு கிடைத்தால், செய்யுங்கள். அதன் மூலம் மன அமைதி கிடைக்கும்.