Monday, May 5, 2025
Homeஜோதிடம்இன்றைய ராசி பலன் - 05-05-2025

இன்றைய ராசி பலன் – 05-05-2025

இன்றைய ராசிபலன் 5.05.2025 விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 22, திங்கட் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள சேர்ந்த பூராடம், உத்திராடம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பிறருக்கு உதவ முன்வருவீர்கள். எதிர்பாராத செலவுகள் அதிகரித்து உங்கள் மன அமைதியை கெடுக்கும். இருப்பினும் இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கை துணையை மகிழ்விக்க எல்லாம் முயற்சிகளையும் செய்வீர்கள். இன்று அதிர்ஷ்டசாலியாக உணருவீர்கள். குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நலம், மன வலிமை பெறுவதில் கவனம் செலுத்தவும். இன்று உங்களுக்கு நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று குடும்ப பிரச்சனைகளை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பீர்கள். அன்புக்குரியவர்களுக்காக நேரத்தை ஒதுக்க முயலவும். வேலை தொடர்பாக உங்களின் புதிய யோசனை பாராட்டை பெற்று தரும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று கடினமான சூழ்நிலையில் கலங்காமல், நிதானமாக முடிவு எடுத்து செயல்படுவது நல்லது. இன்று உங்கள் சூழ்நிலை மகிழ்ச்சியாக மாறும். சமூக நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். இன்று சிலரின் ஆலோசனையை உங்கள் நிதி நன்மைகளை அதிகரிக்கும். பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் பட்ட நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு உங்களுக்கு பாராட்டை பெற்று தரும். இன்று நிதி நன்மைகளை பெறுவீர்கள். விருந்து, விழாக்களில் பங்கேற்க வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் உள்ள பிரச்சனைகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாவீர்கள். தொழிலதிபர்களுக்கு சாதகமான நாள்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நிதிநிலை மற்றும் வேலை தொடர்பான பிரச்சனைகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் தொடர்பான சில விஷயங்களில் வாக்குவாதம் ஏற்படும். குடும்ப உறவுகளை அனுசரித்து செல்லவும். காதல் வாழ்க்கையில் பிணைப்பு அதிகரிக்கும். மூன்றாம் நபரின் பேச்சை கேட்டு செயல்படவேண்டாம். இன்று சில விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று மன அழுத்தத்தை தவிர்க்க குழந்தைகளுடன் தாராளமாக நேரத்தை செலவிடவும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று உங்களின் செயல் திறன் சிறப்பாக இருக்கும். உற்சாகமான மனநிலையில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். நிதி நன்மைகள் அதிகரிக்கும். அன்புக்குரியவர்களுடன் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:  இன்றைய ராசி பலன் - 02-05-2025

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் பணத்தை சரியான வகையில் செலவிட முயற்சிக்கவும். பணியிடத்தில் ஈகோவை விடுத்து சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். பிறருக்கு மதிப்பு கொடுத்து செயல்படவும். உங்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இதனால் உங்கள் நேரம், மனநிலையும் பாதிக்கப்படும். பிறரிடம் மோதலை விடுத்து, புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவும். ஆரோக்கியத்தையும் கவனம் செலுத்தவும். இன்று உங்கள் வேலைகளை முடிப்பதில் சரியாக திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையை விரைவான நடவடிக்கை நீண்ட கால பிரச்சனையை தீர்க்கும். நண்பர்கள் உங்களிடம் கடனை எதிர்பார்க்கலாம். இன்று கடன் கொடுப்பதில் கவனம் தேவை. நேர்மையான சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. இன்று குடும்ப பொறுப்புகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு பல அற்புதமான வாய்ப்புகள் தேடி வரும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று பல பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் சந்திக்க நேரிடும். இன்று மனதளவில் அமைதி அற்றவராக உணர்வீர்கள். திடீர் செலவுகள் நிதி சுமையை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு, உதவி கிடைக்கும். உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவது, செயல்படுவதைத் தவிர்க்கவும். பணியிடத்தில் உங்களின் செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தின் அன்பும் ஆதரவையும் பெறுவீர்கள். முக்கியமான வேலைகளை முடிக்க முடியும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்ட காலம் முதலீடுகளை தவிர்க்கவும். நண்பர்களுடன் மகிழ்ச்சியான தருணத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபட வேண்டாம். நீண்ட காலமாக திட்டமிட்டு வந்த வேலைகளை செய்து முடித்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியம் மற்றும் மன அமைதியை பேண முயலவும். சமூகத்தில் உங்கள் புகழ் அதிகரிக்கும். அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. உங்களின் திட்டமிட்ட வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். எதிர்கால திட்டங்கள் குறித்து அதிகம் யோசிப்பீர்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!