Home ஜோதிடம் இன்றைய ராசி பலன் – 06-09-2025

இன்றைய ராசி பலன் – 06-09-2025

0
இன்றைய ராசி பலன் - 06-09-2025

இன்று செப்டம்பர் 6ம் தேதி, சனிக் கிழமை சந்திரன் மகரம், கும்ப ராசியில் உள்ள அவிட்டம், சதயம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இன்று கிரகங்களின் மாற்றம், சேர்க்கை காரணமாக அனந்த சதுர்த்தசி யோகம் கூடிய தினத்தில், மிதுனம், கடக ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் உள்ளது.இன்று ஆவணி 21, (செப் 6) சனிக்கிழமை அன்று சந்திரன் மகரம், கும்பத்தில் சஞ்சரிப்பார். மகா விஷ்ணுவின் அருள் காரணமாக உருவாகும் ரவி யோகத்தால் சிம்மம், விருச்சிகம், கும்பம் உள்ளிட்ட ராசிகளுக்கு பலவிதத்தில் நன்மைகள் அதிகரிக்கும். இன்று மிதுனம், கடக ராசியில் புனர்பூசம் பின்பு பூசம் நட்சத்திரத்திற்க்கு சந்திராஷ்டமம்.

மேஷ ராசி பலன்

மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் ஒருங்கிணைப்பால் நன்மைகள் அதிகரிக்கும். பிரச்னைகள் தீரும். உங்கள் உறவில் சில நல்ல செய்திகளை கேட்பீர்கள். பணியிடத்தில் நண்பர்கள் முழு ஆதரவு அளிப்பார்கள். இன்று உங்கள் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும். உங்களின் சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கான சில நல்ல தகவல்கள் கிடைக்கும். உங்களின் கடின உழைப்புக்கான முழு பலனைப் பெறுவீர்கள்.

ரிஷப ராசி பலன்

ரிஷப ராசிக்கு இன்று செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களின் மதிப்புகள் மற்றும் மரபுகளைப் பராமரிக்க முடியும். உங்களின் மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும். மூத்தவர்கள், மூத்த அதிகாரிகளின் ஆலோசனையின் பெயரில் செயல்படுவது நல்ல பலனைத் தரும். உங்களின் குடும்ப விஷயங்களில் வெளிநபர்களின் தலையீடுகளைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் அது பிரச்னைகளை அதிகரிக்கும். உங்கள் செலவுகளை மிகவும் கவனிக்க வேண்டிய நாள்.

மிதுன ராசி பலன்

மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு அதிக உற்சாகத்துடன் எந்த செயலிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உற்சாகத்தில் எடுக்கும் முடிவுகள் நினைத்து பின்னர் வருத்தப்படுவீர்கள். உங்கள் சமூகத்தின் மீதான கவனம் அதிகரிக்கும். குழந்தைகள் தங்கள் வேலைகளை தாங்களே செய்ய பழக்குங்கள். சில வணிகம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. தாய்வழி சொந்தங்கள் மூலம் நிதி நன்மைகள் கிடைக்கலாம்.

கடக ராசி பலன்

கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு குடும்பத்தின் சூழல் மிகவும் இனிமையாக இருக்கும். உங்கள் குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கவனமாக செயல்படுவீர்கள். பிறரின் ஆதரவும் கிடைக்கும். உங்களுக்கு சில நல்ல வாய்ப்புகள் தேடிவரும்.அ தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.இன்று முக்கிய முடிவுகள் எடுப்பது, முதலீடு செய்வது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. நெருங்கிய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பொறுப்புகளை உணர்ந்து செயல்படவும்.

சிம்ம ராசி பலன்

சிம்ம ராசிக்கு இன்று உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். உங்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். கோபமாக பேசுவது, செயல்படுவதைத் தவிர்க்கவும். உங்கள் வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். குழந்தைகளுக்கு குடும்பத்தின் மதிப்புகளை சொல்லித்தரவும். உங்கள் பணிகளை சரியாக செய்து முடிக்க படைப்பாற்றல் உதவும். சில புதிய யோசனைகளுடன் செயல்பட்டு பாராட்டு பெற வாய்ப்பு உண்டு. வாக்குறுதிகளைச் சரியான நேரத்தில் முடிக்க முயலவும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு அவசரமாக எந்த வேலையும் செய்வதை தவிர்க்கவும். உங்களின் கலைத் திறன் வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் இருக்கும். சட்ட விஷயங்களில் சில நல்ல தகவல்கள் கிடைக்கும். குடும்ப பிரச்னைகளை தீர்க்க ஒன்றாக கூடி தீர்வு காணலாம். குடும்ப விவகாரங்களை வெளிநபர்களிடம் சொல்லாதீர்கள். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நல்ல செய்தி தேடி வர வாய்ப்பு உண்டு. வேலைக்காக வெளியூர் செல்ல வாய்ப்பு உண்டு.

துலாம் ராசி பலன்

துலாம் ராசியினருக்கு இன்று புதிய வேலைகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுவார்கள். குடும்ப உறவுகள் இனிமையாக இருக்கும். பிரச்னைகள் தீரும். செல்வாக்கும், நற்பெயரும் அதிகரிக்கும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிக்கவும். இன்று வெளிநபர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். இன்று நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் முடிந்த வரை முதலீடுகளைத் தவிர்க்கலாம். இல்லையெனில் துறை வல்லுநர்களின் ஆலோசனை பெற்று செயல்படவும். புதிய வேலைகளை செய்வதில் ஆர்வப்படுவீர்கள். பட்ஜெட் போட்டு செலவிட வேண்டிய நாள்.

விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசியினருக்கு இன்று செல்வ சேர்க்கையும், மதிப்பும் அதிகரிக்கும்.உங்கள் குடும்பத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து சில செயல்களை செய்ய முயல்வீர்கள். உங்களிடம் போட்டி மனப்பான்மை அதிகமாக இருக்கும். சில பெரிய நன்மைகள் கிடைத்து மகிழ்வீர்கள். இன்று சில முக்கியமான வேலைகளை முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். தாய் வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். மானவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். எதிர்பார்த்தை விட அதிக பணம் சம்பாதிக்க முடியும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசிக்கு இன்று அதிர்ஷ்டத்தின் பார்வை நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் மூதாதைகளின் சொத்துகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தின் மூத்த நபர்களின் அன்பு, ஆசிர்வாதக்ம் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்னைகள் தீரும். உங்கள் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று உங்களின் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ப நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சில பெரிய வெற்றியை நீங்கள் எதிர்பார்க்கலாம். நிதி நன்மை அதிகரிப்பதால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகர ராசி பலன்

மகர ராசிக்கு இன்று உடல் நலனில் மிகவும் கவனமாக இருக்கவும். இன்று அவசரமாக எந்த ஒரு வேலையும் செய்வதை தவிர்க்கவும். அதனால் வேலையில் தவறுகள் நடக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் வேலைகளில் சரியாக விதிகளை பின்பற்றி நடக்கவும். இன்று உங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான யோசனைகளில் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. இன்று பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

கும்ப ராசி பலன்

கும்பம் ராசி சேர்ந்து அவர்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து. இருக்கும் உங்களின் வேலையை சரியாக செய்ய முடியும். இன்று சில முக்கியமான வேலைகளை முடிப்பதற்காக சக ஊழியர்களிடம் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபடுவீர்கள். இன்று வணிகம் தொடர்பாக திட்டங்கள் நல்ல லாபத்தை தர வாய்ப்பு உண்டு. உங்கள் துணைக்காக சிறிய தொழிலை தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் அன்பும், ஆதரவும் நிறைந்த நாளாக இருக்கும்.

மீன ராசி பலன்

மீன ராசியை சேர்ந்தவர்களுக்கு கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் சக நண்பர்கள் மற்றும் அதிகாரிகளின் முழு நம்பிக்கையைப் பெறுவீர்கள். அரசு தொடர்பான வேலைகளை மிகவும் கவனமாக செய்து முடிக்கவும். இந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல நாளாக அமையும். எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும் அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பழைய நோய்கள் மீண்டும் தொந்தரவு தர வாய்ப்புகள் உண்டு. பண பரிவர்த்தனை தொடர்பான சிக்கல்களை சந்திக்க வாய்ப்பு உண்டு.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version