இன்று செப்டம்பர் 7, பெளர்ணமி திதி நிறைந்துள்ள நாளில் சந்திரன் இன்று கும்ப ராசியில் சதயம், பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். இன்று சித்த யோகம் உள்ளது. இன்று கடக ராசிக்கு சந்திராஷ்டமம் நாள். இன்று உருவாகும் சந்திர கிரகணம் மற்றும் புதாதித்ய யோகத்தால் யாருக்கு நன்மை, தீமை ஏற்படும் என பார்ப்போம்.
மேஷ ராசி பலன்
மேஷ ராசி சேர்ந்தவர்களுக்கு வியாபாரம் தொடர்பாக நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வீட்டில் பராமரிப்பதற்கான செலவுகள் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். நிதி நிலை வலுவாக இருக்கும். இதனால் உங்களின் மனநிலை மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசாங்கத்திடம் இருந்து விருது அல்லது பாராட்டு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு ஆன்மீக பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டு. நீதிமன்ற வழக்கு விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு பதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதனால் உங்களின் மன அழுத்தம் குறையும். சக ஊழியர்களின் ஆதரவால் திட்டமிட்டு வேலைகள் சரியாக முடிக்க முடியும். இன்று குடும்பத்தில் சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.. குடும்பத்தினரிடம் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று ஒழுக்கமாக நடந்து கொள்ளவும். எந்தவித ஏமாற்று வேலைகளில் ஈடுபட வேண்டாம்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு உங்கள் வேலை தொடர்பாக திட்டங்களில் கவனம் செலுத்துவீர்கள். மூத்த நபர்களின் ஆதரவு பெறலாம். வெளிநாடு தொடர்பான வேலை வாய்ப்புகளை பெறுவீர்கள். நிதிநிலை முன்னேற்றம் அடையும். பெரிய பண பரிவர்த்தனைகளை தவிர்க்கவும். உறவினர்களுடன் உறவு மேம்படும். ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுக்கு பிடித்தமான சில பொருட்களை வாங்குதல் அல்லது செயல்களில் ஈடுபட நினைப்பீர்கள்.
கடக ராசி பலன்
கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு நிலுவையில் உள்ள வேலைகளை சரியாக முடிக்க முடியும். இன்று முக்கியமான வேலைகளை முடிப்பது முடிப்பதற்கான விவாதங்களில் ஈடுபடுகிறது. உங்கள் நண்பர்களின் ஆதரவு தெரிவிக்கும். திருமணத்திற்கு முயற்சி செய்யக் கூடிய நபர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் நேர்மறையான சூழ்நிலை இருக்கும். சக ஊழியர்கள் உங்களை முழுவதுமாக ஆதரிப்பார்கள் குழந்தைகளால் திருப்தி அடைவீர்கள்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு மிகவும் பிஸியான சூழல் இருக்கும். ஆன்மீக செயல்பாடுகளில் அக்கறை காட்டுவீர்கள். உங்கள் பேச்சை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்படவும். வீட்டிலும் பணியிடத்திலும் எந்த விதமான விவாதங்களிலும் ஈடுபட வேண்டாம். காதல் வாழ்க்கையில் இனிமையான அனுபவம் இருக்கும். இன்று உங்கள் செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். வேலை தொடர்பாக உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கலாம். உங்கள் புத்திசாலித்தனமான வேலைகள் நல்ல பலனை தரும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று மிகவும் கவனமாக செயல்படவும். பிறரிடம் வம்பு வாக்குவாதங்களில் ஈடுபடுவது கூடாது. பணியிடத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு முழு ஆதரவைத் தரும். நிதி நிலைமை முன்னேற்றம் அடையக் கூடியதாக இருக்கும். வணிகம் தொடர்பான விஷயங்களில் சில பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் நலனில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் திரு சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக விவாதிப்பீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு வியாபாரம் தொடர்பாக முன்னேற்றமும், புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும். தாயின் வழிகாட்டுதல் காரணமாக வெற்றி பெறுவீர்கள். குடும்ப சொத்து விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆசியை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். இன்று உங்கள் செயல்பாடுகளை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். அனைத்து கருத்து வேறுபாடுகளும் நீங்கும். இன்று உங்கள் வேலை தொடர்பாக பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டு.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு உங்கள் பிள்ளைகளிடம் இருந்து சில நல்ல செய்திகள் பெறுவீர்கள். குடும்ப சொத்துக்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குடும்பத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் அதிகரிக்கும். உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பாக பொறுமைகளை கொண்டு வர முயற்சிப்பீர்கள். எதிர்காலத்தில் அதற்கான முழு பலனை பெறுவீர்கள். முதலீடு தொடர்பான நல்ல நாளாக இருக்கும். இது உங்கள் வேலைக்கு புதிய நம்பிக்கையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு இனிமையாக இருக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியை சேர்ந்தவர்கள் தொழில் செய்து ரிஸ்க் எடுக்க வேண்டியது இருக்கும். அதன் மூலம் பெரிய லாபம் கிடைக்கும். நீங்கள் நினைத்த வகையில் வெற்றியடைய மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். பெற்றோருடன் உங்களின் உறவுகள் சுமூகமாக இருக்கும். நண்பர்களிடமிருந்து முழு ஆதரவை பெறுவீர்கள். இன்று நிதி அபாயம் உள்ளது என்பதால் எந்தவித முதலீட்டையும் தவிர்ப்பது அவசியம். உங்கள் நெருக்கமானவர்களுக்கு பணம் ஏற்பாடு செய்ய நினைப்பீர்கள்.
மகர ராசி பலன்
மகர ராசியில் சேர்ந்தவர்களுக்கு தொழில் தொடர்பாக லாபம் கிடைக்கும். அண்டை வீட்டாரின் பிரச்சினைகளை தீர்க்க பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்கள் உயர் கல்விக்கான நல்ல பாதை அமையும். ஒரே நேரத்தில் பல பணிகளை செய்ய வேண்டிய சூழல் இருக்கும் என்பதால் பதற்றம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். அரசியல் தொடர்புடையவர்களுக்கு மக்களின் ஆதரவு பெருகும். இன்று அரசாங்கம் தொடர்பான வேலைகள் தாமதப்படும்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசிக்கு சேர்ந்தவர்களுக்கு தொழில் தொடர்பாக சில பிரச்சனைகளை எதிர் கொண்டால் அதிலிருந்து விடுபடுவீர்கள். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அலை அதிகரிக்கும். வணிகம் தொடர்பாக இனிமையான நாளாக இருக்கும். அவசரமாக எந்த ஒரு வேலையை செய்வது அல்லது முடிவு எடுப்பதை தவிர்க்கவும். இதனால் தேவையற்ற இழப்புகளை தவிர்க்கலாம். உணவு மற்றும் பானம் தொடர்பான விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும். உங்கள் காதல் வாழ்க்கையில் புதிய உற்சாகம் நிறைந்திருக்கும்.
மீனம் ராசி பலன்
இன்று தொழிலில் ரிஸ்க் எடுப்பதன் பலன் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று வேலைவாய்ப்பு தொடர்பான சில நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். வணிகம் தொடர்பான பயணங்கள் இன்று மகிழ்ச்சியைத் தரும். திருமணமானவர்களுக்கு இன்று நல்ல திட்டங்கள் கிடைக்கும். இன்று குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளால் மனம் மகிழ்ச்சியடையும், மேலும் நீங்கள் மதப் பணிகளைச் செய்வீர்கள். துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு நீங்கள் உதவி செய்தால், இன்று உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இன்று மாலை நேரம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சிரிப்பிலும், வேடிக்கையும் நிறைந்திருக்கும்.