இன்று 9 அக்டோபர் 2025 வியாழக் கிழமை சந்திரன் மேஷ ராசியில் பயணிக்கிறார். இன்று சித்த யோகம் கூடிய நாள். இன்று சுக்கிரன், சூரியன் கிரகங்களின் அமைப்பால் அனபா யோகம், தன யோகம் கூடிய நாள். இன்று கன்னி ராசியின் அஸ்தம் நட்சத்திரத்திற்க்கு சந்திராஷ்டம உள்ளது.
மேஷம் ராசி பலன்
இன்று உங்களுக்கு நேரம் சாதகமாக இருக்காது என்பதால், உங்கள் தொழிலுக்காக வங்கி அல்லது நிறுவனத்திடமிருந்து கடன் வாங்க நினைத்தால், இன்றே அதைத் தவிர்க்கவும். இன்று வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவது கடினமாக இருக்கும். இன்று உத்தியோகஸ்தர்கள் வேலை தொடர்பாக அல்லது மாணவர்கள் கல்விக்காக வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கும். இன்று பழைய நண்பர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும், மேலும் உங்கள் நட்பு வட்டமும் அதிகரிக்கலாம். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
ரிஷபம் ராசி பலன்
இன்று உங்களை வேலை மற்றும் பொறுப்புகளை நிறைவேற்ற அதிக அலைச்சல் ஏற்படும்.உங்கள் செயல்பாடுகளில் கவனம் தேவை. சிலருக்கு காலில் காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. நீங்கள் செய்யக்கூடிய எந்த ஒரு தொழில் அல்லது வியாபாரத்தில் கடினமான சூழ்நிலை சமாளிக்க முடியும். இது உங்களின் எதிர்காலத்தை வளமாக்கும் வாய்ப்பு உண்டாகும். உங்களின் நிதிநிலை முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள். இன்று மாலை நேரத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசிக்கு இன்று உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். சிலருக்கு உடல் சோர்வு, வலி ஏற்படும். இன்று நீங்கள் தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். இது உங்களின் நிதி நிலையை பாதிக்க வாய்ப்பு உண்டு. இன்று குழந்தைகள் தொடர்பாக சில நல்ல செய்திகள் கிடைக்கும். இது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை அதிகரிக்க கூடியதாக இருக்கும். இன்று சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறது. அதில் சில தடைகள் ஏற்படலாம்.
கடக ராசி பலன்
கடக ராசி சேர்ந்தவர்களுக்கு உங்கள் பிள்ளைகளின் செயல்பாடு மற்றும் வேலை தொடர்பான நம்பிக்கை வலுப்படும். தாய் வழி சொந்தங்களின் அன்பும், ஆதரவும் பெறுவீர்கள். செய்திகளே அதிகரிக்க அதிகம் செலவிடுவீர்கள். இன்று நிதி நிலையை சரியாக உணர்ந்து உங்கள் செலவுகளை செய்யவும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. உன் கடன் உழைப்பில் இருந்து சிறப்பான பலனை இன்று பெறுவீர்கள்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் சில மன அழுத்தத்தால் தொந்தரவுகள் ஏற்படும். இன்று உங்கள் வேலையில் சிரமங்களை சந்தித்த இலக்கை அடைய முடியும். உங்கள் பெற்றோரின் உதவி மற்றும் ஆசீர்வாதம் பெற்று செயல்படுவது நல்லது. இன்று நண்பர்களுக்கு பின்னர் ஓரளவு நிவாரணம் கிடைக்கும். எனக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் மாமியார் வீடு மூலம் உதவிகள் கிடைக்கும். இன்று சூழலை உணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு உங்கள் வேலையை செய்து முடிப்பதில் கவனம் தேவை. குறிப்பாக உங்கள் சுகங்களை விடுத்து உங்களின் வேலை, வணிகம் தொடர்பாக விரைவாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். பெற்றோரிடமிருந்து அன்பும், ஆதரவும் கிடைக்கும். இன்று உங்கள் துணைக்கு உடல்நல பிரச்சினைகள் அசௌகரியமாக உணர்வார்கள். இன்று தேவையற்ற செலவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்கள் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். என்ற நீங்கள் சுயநலமாக செயல்படுவீர்கள்.
துலாம் ராசிபலன்
துலாம் ராசிபலன்
துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு உங்களின் அதிகாரமும், செல்வமும் அதிகரிக்க கூடிய நாள். இன்று மற்றவர்களின் நலனை பற்றி சிந்தித்து செயல்படவும். முழு மனதுடன் செய்ய வேண்டிய நாள். உங்கள் வேலை மற்றும் தொழில் தொடர்பான புதிய முதலீடு செய்ய திட்டமிடுவதற்கு. இது உங்கள் எதிர்காலத்திற்கு குறிப்பிடத்தக்க நன்மையை தரும் குடும்ப சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. வார்த்தைகளில் இனிமையை கடைபிடிக்கவும்.
விருச்சிகம் ராசி பலன்
இன்று அதிகமாக கோபப்படுவீர்கள். உங்கள் பேச்சு மற்றும் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உங்கள் தொழிலை விரிவு படுத்துவதற்கான முயற்சிகளில் நல்ல பலன் தரும். சட்டம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பாக எந்தவித வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கும். இந்த மாலை நேரத்தில் சில சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் செயல்பாடு சிறப்பான முன்னேற்றத்தை தரும்.
தனுசு ராசி பலன்
இன்று நீங்கள் தர்ம காரியங்களில் ஈடுபடுத்திச் செலவிடுவீர்கள். ஆன்மீகம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். தர்ம காரியங்களுக்காகவும் பணத்தைச் செலவிடுவீர்கள். இன்று உங்கள் நிதி நிலைமையும் மேம்படும். மாலை முதல் இரவு வரை வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே கவனமாக இருங்கள். இன்று உங்கள் உணவுப் பழக்கத்தில் மிகவும் கவனமாக இருக்கவும். மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களின் ஆசிகளைப் பெறுவார்கள். உடன்பிறந்தவர்களின் ஆலோசனை உங்கள் தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும்.
மகரம் ராசிபலன்
மதிப்புமிக்க பொருட்களை வாங்குவதோடு, உங்கள் விருப்பத்திற்கு மாறாக கூட சில தேவையற்ற செலவுகளையும் நீங்கள் சந்திப்பீர்கள், இது உங்கள் நிதி நிலைமைக்கு நல்லது. இன்று, உங்கள் தாய்வழி குடும்பத்தினரிடமிருந்து மரியாதை பெறுவீர்கள். உங்களுடைய எதிர்காலத்தில் மனதில் வைத்து செய்யக்கூடிய முதலீடுகள் பலனளிக்கும். நீங்கள் வியாபாரத்தில் ஆர்வமாக இருப்பீர்கள், மேலும் உங்கள் நிலுவையில் உள்ள வேலைகள் நிறைவடையும். இன்று மாலை, உங்கள் குழந்தைகளை ஒரு சிறிய பயணத்திற்கு அழைத்துச் செல்லலாம்.
கும்பம் ராசிபலன்
இன்று உங்களுக்கு வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கும். புதிய விஷயங்களை செயல்படுத்தி உங்கள் தொழிலை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்ல உங்கள் புத்திசாலித்தனத்தையும், ஞானத்தையும் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் தேவைகளைக் கட்டுப்படுத்துங்கள்; அவற்றை மிகைப்படுத்தாதீர்கள், இல்லையெனில் நீங்கள் இழப்புகளைச் சந்திக்க நேரிடும். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காமல் போகும், எனவே உங்கள் வேலைகள் சரியான திட்டமிடல் தேவை. எதையும் கவனமாக செய்து முடிக்கவும்.
மீன ராசி பலன்
இன்று உங்களுடைய பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக இருந்த தடை, தாமதங்கள் நீங்கும். இன்று உங்களுடைய ஆளுமை சிறப்பாக இருக்கும். செயலில் முன்னேற்றம் ஏற்படும் என்பதால் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். இன்று உங்கள் செயல்பாடுகளுக்கு சமூகத்தின் அங்கீகாரம் கிடைக்கும். இது உங்கள் மன உறுதி மேம்படுத்தும். தேர்வுக்கு தயாராக கூடிய மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிக்கவும். புதிய வேலைக்கு முயற்சி செய்யக் கூடிய நபர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.