Wednesday, April 16, 2025
Homeஜோதிடம்இன்றைய ராசி பலன் - 10-04-2025

இன்றைய ராசி பலன் – 10-04-2025

இன்றைய ராசிபலன் 10.04.2025, குரோதி வருடம் பங்குனி மாதம் 27, வியாழக் கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் திருவோணம், அவிட்டம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை சம்பந்தமான நிறைய அலைச்சல் இருக்கும். பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே செலவுகள் அதிகரிக்கும். அதனால் கவலை ஏற்படும். தேவையற்ற செலவுகள் உங்களைத் தொந்தரவு செய்யும். வேலையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும் நாள். வேலையை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கையில் கோபத்தை உங்களுக்கு தொந்தரவு செய்யலாம். காதல் வாழ்க்கையில் மிகவும் ரொமான்டிக்காக இருக்கும். இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்:

இன்று உங்களுக்கு நல்ல நாள். வேலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். அதனால் இன்று சந்தோஷமாக இருப்பீர்கள். இன்று உங்கள் வருமானம் அதிகரிக்கும். நீண்ட பிறரிடம் சிக்கியுள்ள பணம் திரும்பக் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் ரொமான்ஸ் இருக்கும். உங்கள் துணைவியுடன் சந்தோஷமாக இருப்பீர்கள். காதலிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இருவருக்கும் இடையே தவறான புரிதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மிதுனம்

இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்கள் குடும்பத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். அதனால் வேலையில் புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்கள் கவனத்தை ஈர்க்கும். அதில் வெற்றியும் கிடைக்கும். இன்று உங்கள் வருமானம் கொஞ்சம் குறையலாம். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும். திருமண வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக பேசி, நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். காதலிப்பவர்கள் இன்று சந்தோஷமாக இருப்பார்கள்.

கடகம்:

இன்று உங்களுக்கு சுமாரான நாள். சில கவலைகள் ஏற்படும். அது உங்கள் மனதிற்கு தொந்தரவு தரக்கூடியதாக இருக்கும். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஒரு நல்ல வாய்ப்பு உங்களைத் தேடி வரும். அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். அதனால் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். காதலிப்பவர்கள் தங்கள் காதலிக்காக ஏதாவது பரிசு வாங்கித் தருவார்கள்.

சிம்மம்:

இன்று நீங்கள் எதையாவது பற்றி அதிகமாக யோசித்து கவலைப்படுவீர்கள். அது உங்கள் உடல்நிலையைப் பாதிக்கும். வேலையில் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள். உங்கள் எண்ணங்கள் மற்றவர்களை விட முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை இன்று மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் காதலி செயல்பாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும். அது உங்கள் மனதில் அவர் மீதுள்ள மரியாதையை அதிகரிக்கும்.

கன்னி:

இன்று உங்களுக்கு சுமாரான பலன் கிடைக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். அதனால் உங்களுக்கு நிதி நிலை சார்ந்த கவலை ஏற்படும். உங்கள் புத்திசாலித்தனத்தால் சந்தோஷமான தருணங்களை உருவாக்க முடியும். காதல் வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். உங்கள் காதலியுடன் நெருக்கம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் டென்ஷன் அதிகரிக்கலாம். உங்கள் கோபத்தைத் தவிர்த்து வாழ்க்கைத் துணையுடன் விட்டுக் கொடுத்து செல்லவும். நண்பர்கள் உங்களுக்கு உதவலாம்.

இதையும் படியுங்கள்:  ஜோதிடம் பலிக்காததால் ஜோதிடரை கொன்ற பெண்- விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

துலாம்:

இன்று உங்களுக்கு நல்ல நாள். இன்று உங்கள் பிள்ளைகள் தொடர்பான விஷயங்கள் உங்களை சந்தோஷப்படுத்தும். உங்கள் பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் இடையே அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். காதலிப்பவர்கள் இன்று தங்கள் காதலிக்காக ஏதாவது ஸ்பெஷலாக செய்ய முயல்வார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனம் சந்தோஷமாக இருக்கும்.

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு சாதகமான நாள். இன்று உங்கள் குடும்பத்திற்கு அதிக கவனம் செலுத்துவீர்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த வீட்டு வேலைகளை இன்று செய்து முடிக்கலாம். வேலையில் இன்று நல்ல நாள். உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். அதனால் இன்று உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல சமநிலை இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் இனிமையாக பேசி மகிழ்வீர்கள். நீங்கள் எதிர்பார்க்காத சில விஷயங்களை செய்வீர்கள். காதல் விஷயத்தில் கோபத்தை விடுத்து விட்டுக் கொடுத்து செல்லவும்.

மகரம்:

இன்று உங்களுக்கு சாதகமான நாள். நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு லாபம் கிடைக்கும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்கள் சக ஊழியர்களுடன் இணக்கமான சூழல் இருக்கும். முக்கியமான வேலையில் அவர்களின் உதவி கிடைக்கும். மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் வரும். திருமண வாழ்க்கையில் சந்தோஷம் நிறைந்திருக்கும். . காதல் வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். செலவுகள் குறையும்.

கும்பம்:

இன்று உங்களுக்கு லாபகரமான நாள். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும். சொத்து வாங்குவது தொடர்பாக விவாதிப்பீர்கள். அதுவும் வெற்றி பெறும். நல்ல விஷயங்களுக்காக செலவு செய்வீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். வேலையில் கொஞ்சம் கவனம் தேவை. மனம் அலைபாய்வதால் வேலையில் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். உங்கள் செயல்பாடுகளால் லாபம் ஏற்படும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அனுபவிப்பீர்கள்.

மீனம்:

இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். வேலையில் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் நிலை வலுவாக இருக்கும். உங்கள் மனதில் கோபத்தைக் கட்டுப்படுத்தவும். அதனால் உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனை வரலாம். காதலிப்பவர்கள் இன்று மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள். திருப்தியாக உணருவார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!