இன்றைய ராசி பலனை (மே 11, 2025 ஞாயிற்று கிழமை) இன்று சந்திரன் பகவான் துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று மீனம் ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பொழுதுபோக்குகளில் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். உங்களின் வேலை அல்லது வணிகம் தொடர்பாக நிதி நன்மைகள் பெறுவீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பாக சிக்கல் ஏற்படும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான சுழல் இருக்கும். மனிதன் தொடர்பான பயணங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திருமணமானவர்களுடன் நல்ல நேரத்திற்கு செல்ல விட வாய்ப்பு கிடைக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட கால நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். நிதிநிலை மேம்படும். இன்று குடும்பத்தினருடன், குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். முக்கியமான பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யவும். பயனற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் சிரமங்கள் அதிகரிக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மனதளவில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கடினமான காலங்களில் உதவிய உறவினர்களுக்கு நன்றி தெரிவிப்பீர்கள். துணையுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யவும். இன்று அலுவலக பணிகளை முடிப்பதில் சரியான திட்டமிடல் அவசியம். நீங்கள் செய்யக்கூடிய தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நலனில் கவனம் தேவை. சில உடல் பகுதிகளில் வலி அதிகரிக்கும். இன்று உங்கள் வேலைகளையும் முடிக்க அதிக உழைப்பு தேவைப்படும். இன்று தான தர்மங்கள் செய்வதன் மூலம் நிம்மதியை உணர்வீர்கள். இன்று உங்களின் காதலை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களின் வாழ்க்கைத் துணையை அனுசரித்துக் கொள்வது நல்லது.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நலம் தொடர்பாக கவனம் தேவை. சிலருக்கு ரத்தம் தொடர்பான பிரச்சனை ஏற்படும். நிதிநிலை மேம்படும். இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்களின் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. திறமையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடவும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் இருக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நலம் மேம்படும். இன்று போட்டி, பந்தயங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வீடு, மனை வாங்குவது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும், குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். இன்று உங்களின் விருப்பங்கள் நிறைவேற்றவும், பொழுதுபோக்கிற்காகவும் பணத்தை செலவிடுவீர்கள். வீட்டில் வயதானவர்களின் உடல்நலம் தொடர்பாக பிரச்சனைகள் ஏற்படும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று உடன்பிறந்தவர்களுக்கு நிதி தொடர்பாக உதவுவீர்கள். நிதிநிலை சற்று மோசமாக இருக்கும். இன்று உங்களின் கருத்தை நிரூபிக்கப் போராடுவீர்கள். பணியிடத்தில் உங்களின் ஆற்றல் பாராட்டை பெற்று தரும். உங்கள் பேச்சில் இனிமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மன அழுத்தத்தை தவிர்க்க குழந்தைகளுடன் விளையாடுவதும். யோகா, தியானங்களில் ஈடுபடுவது நல்லது. மனதளவில் ஆற்றல் அதிகரிக்கும் இன்று பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். முன்னர் செய்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். காதல் விஷயத்தில் சாதகமற்ற சூழல் இருக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் ஆளுமைத் திறன், இனிமையான பேச்சு பிறரை ஈர்க்கும் வகையில் இருக்கும்.இன்று பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இன்று சில விஷயங்களால் அனைவரையும் விட்டு விலகி அமைதியை நாடுவீர்கள். வாழ்க்கை துணையின் ஆதரவால் சிரமங்களை எளிதாக எதிர்கொள்வீர்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று மிகச் சிறப்பான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வழக்கத்தைவிட அதிகமாக உணவு மீது அக்கறை காட்டுவீர்கள். முக்கியமான வேலைகளை செய்து முடிப்பதில் சரியான திட்டம் நிழல் அவசியம். உங்கள் மனதில் தேவையற்ற சந்தேகங்களும், சஞ்சலங்களும் ஏற்படும். கடினமான நேரத்தில் நிதானமாக அமர்ந்து தீர்வு காண முயற்சிக்கவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சில காலமாக இருக்கக்கூடிய குழப்பமான மனநிலை நீங்கும். அதிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். இன்று உங்கள் விலைமதிப்பான பொருட்கள் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்தவும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். பழைய முதலீடுகள் சற்று இழப்பை தர வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணைக்கு அழகான பரிசு வழங்குவீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் கவனம் தேவை. பணத்தின் மீதான மதிப்பு உணர்வீர்கள். சேமிப்பதில் அக்கறை அதிகரிக்கும். இன்று பெரிய பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். இன்று சமூகம் மற்றும் ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.