இன்றைய ராசிபலன் 12.05.2025 விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 29, திங்கட் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் உள்ள சேர்ந்த உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பிறரிடம் சிக்கி உள்ள பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு உண்டு. பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஆச்சரியமான பரிசை பெறுவீர்கள். இன்று நண்பர்கள் அல்லது நலம் விரும்பிகளின் ஆலோசனை உங்களுக்கு உதவும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் உடல்நலம் சற்று மோசமாக உணர்வீர்கள். இன்று குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு எல்லாத் துறைகளிலும் கிடைக்கும். இன்று உங்களின் பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. தேவையற்ற பேச்சால் வீட்டில் குழப்பம் ஏற்படும். குடும்பத்தின் சுப நிகழ்ச்சிகள் குறித்து குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை பெறுவீர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். இன்று தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களால் அலைச்சலும் தேவையற்ற பிரச்சனைகளும் ஏற்படும். குடும்பத்தினரின் முழு ஆதரவை பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். குழந்தைகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இன்று எதிர்காலம் தொடர்பாக கவலை அதிகரிக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று கொஞ்சம் கடினமான நாளாக இருக்கும். இன்று உங்கள் வேலையில் வெற்றி பெற அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பாமல் கடின உழைப்பு தேவைப்படும். உங்களின் பணத்தை கவனமாக செலவிடவும். காதல் உறவுகளில் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. இன்று உங்களுக்கு விருப்பமான நபர்களை சந்திப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய நாள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் நல்ல நாளாக அமையும்.. இன்று முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் குடும்பத்தினருடன் ஆலோசித்து செயல்படுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகிறீர்கள். இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் தொடர்பான விஷயங்கள் மகிழ்ச்சியை தரும். உங்களுக்கு காதலில் உள்ளவர்களுக்கு திருமணத்திற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். இன்று உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். காதலில் உங்கள் அன்பை வெளிப்படுத்த முயல்வீர்கள். இன்று சில விஷயங்களால் உங்கள் விலைமதிப்பற்ற நேரம் வீணாகும். அதனால் உங்கள் வேலையை சரியாக செய்து முடிக்க திட்டமிடல் அவசியம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். நண்பர்களுடன் வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். நாள்பட்ட நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். உடல்நலம் மேம்படும். வாழ்க்கையில் பிறர் மூலம் அன்பையும் மகிழ்ச்சியையும் உணர்வீர்கள். குடும்பத்தினருக்காக நேரத்தை ஒதுக்க முயற்சி செய்யவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட காலமாக ஏதேனும் ஒரு வேலையை செய்து முடிக்க முயற்சிப்பவர்களுக்கு, அதை முடித்த குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சில வேடிக்கையான விஷயங்கள் நடக்கும். நிதி நெருக்கடிகளால் சிரமப்படுவீர்கள். காதல் உறவு இனிமையாக இருக்கும். இன்று உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் விருந்து விழாக்களில் பங்கேற்க வாய்ப்பு உண்டு.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் நண்பர்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. இன்று முக்கியமான வேலைகளை முடிப்பதில் சில நபர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவும். வேலையில் சத ஊழியர்களால் ஊக்கத்தை பெறுவீர்கள். பிறரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். இன்று செய்து முடிக்க வேண்டிய முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தவும். நிதி சார்ந்த சிக்கல் ஏற்படும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சட்டத்திற்கு புறம்பான விஷயங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். சிறப்பு கவனம் செலுத்தவும். உங்களின் விருப்பங்களையும் நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். இன்று உங்கள் மனதையும் உடலையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இன்று பிறரின் உணர்வுக்கு மதிப்பளித்து செயல்படவும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட காலத்துக்கு பிறகு குடும்ப உறவுகளை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று பணத்தை சம்பாதிக்க புதிய வழிகள் திறக்கும். உங்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். கடினமான சூழ்நிலையை பொறுமையாக கையாள்வது நல்லது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று சிரமங்கள் நிறைந்த நாளாக இருக்கும். இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் உங்கள் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைப்பிடிக்கவும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி பொறுமையாக செயல்படவும். பணம் முதலீடுகளை தள்ளி வைப்பது நல்லது. குழந்தையின் ஆரோக்கியம் தொடர்பாக கவலை ஏற்படும்.