இன்றைய ராசிபலன் 13.04.2025, குரோதி வருடம் பங்குனி மாதம் 30 ஞாயிற்று கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம், மீன ராசியில் உள்ள சேர்ந்த பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். இன்று உங்கள் வேலைகளை செய்து முடிப்பதில் தடைகளால் கவலைப்படுவீர்கள். சில மாயையான விஷயங்களால் பயப்படத் தேவையில்லை. உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற நல்ல பலன்கள் பெறுவீர்கள். சூழல் உங்களுக்கு சாதகமாக மாறும். வருமானம் அதிகரிக்கும். அலுவலக பணிகளில் திட்டமிட்டு செயல்படவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்காலத்தில் பெரிய முன்னேற்றத்திற்கான திட்டங்களில் ஈடுபடுவீர்கள். சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வீடு கட்டுதல், வாங்குதல் தொடர்பான செலவுகள் உண்டாகும். இன்று காதல் துணையை அனுசரித்துச் செல்லவும். திருமண வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். மன அழுத்தம் ஏற்படக்கூடிய நாள். இன்று உடல் நலம் சற்று பலவீனமாக இருக்கும். வேலை தொடர்பாக தொடர்ச்சியாக சிக்கல்களை சந்திக்க நேரிடும். உங்களின் வருமானம் மிக சிறப்பாக இருக்கும். அரசு தொடர்பாக நல்ல பலன் கிடைக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். மனதளவில் பலவீனமாக உணருவீர்கள். முக்கிய வேலைகளை செய்து முடிப்பதில் சோர்வாக உணர்வீர்கள். இன்று துணையுடன் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். வாழ்க்கை துணையின் உடல் நலன் மோசம் அடையும். கடினமான நேரத்தில் நலம் விரும்பிகளின் ஆலோசனை பெறுவது நல்லது. இன்று புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டியது இருக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் உள்ள குழப்பங்கள் நீங்கி தெளிவு அடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும். முக்கிய வேலைகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப முன்னேற்றத்தில் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியை தரும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். முக்கிய பணிகளில் சில குறிப்புகள் காரணமாக சங்கடங்கள் ஏற்படும். அதனால் மனக்கவலை அதிகரிக்கும். இருப்பினும் சரியான திட்டத்துடன் செயல்பட்டால் எதிர்பார்த்த வெற்றியை பெறலாம். சண்டைகளைத் தவிர்க்க வேண்டிய நாள். உங்கள் வேலையில் நலம் விரும்பிகளின் ஆலோசனை பெறுவதால் முன்னேற்றம் உண்டாகும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடு மகிழ்ச்சியை தரும். திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுத்த செல்லவும். குடும்பப் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.. இன்று எந்த ஒரு வாக்குவாதத்திலும் ஈடுபட வேண்டாம். வேலைகளில் கவனமும், திட்டமிடலும் அவசியம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அதிக கவனம் தேவை. வீட்டு செலவுகள் அதிகரிக்கும், அதற்கேற்றார் போல வருமானமும் சிறப்பாக இருக்கும். உங்களின் வேலையில் இருக்கக்கூடிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். காதல் வாழ்க்கையில் துணையின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பல விதத்தில் நற்பலன்கள் கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் சாதகமான பலனை தரும். உடல் நலனில் கவனம் தேவை. குடும்ப சூழ்நிலை சாதகமாக இருக்கும். காதல் வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுத்துச் செல்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டிய நாள். உங்கள் ஆசைகளை நிறைவேற்றுவதில் முன்னுரிமை கொடுப்பீர்கள். வேலை தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். வருமானம் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாள். வேலையில் உள்ள தடைகள் நீங்கும். சூழ்நிலைகள் அதிகமாக இருக்கும். எங்கள் நம்பிக்கையால் எந்த ஒரு கடினம் வேலையும் செய்து முடிப்பீர்கள். திருமண வாழ்க்கையில் அன்பு நிறைந்திருக்கும். காதலில் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். இன்று தேவையற்ற செலவுகள் துரத்த வாய்ப்புள்ளது. அதனால் செலவு விஷயத்தில் கவனம் தேவை. காதல் வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் தீரும். துணையுடன் தவறான புரிதல்கள் ஏற்படும்.