இன்று ஆகஸ்ட் 14, வியாழக்கிழமை குரு அருள் நிறைந்த இன்று குரு சுக்கிர சேர்க்கையால் கஜலட்சுமி யோகம் உருவாகிறது. இன்று சந்திரன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார். சிம்ம ராசியில் உள்ள பூரம், உத்திரம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று உருவாகும் ரவி யோகம் காரணமாக எந்தெந்த ராசிகளுக்கு அற்புதமான பலன் கிடைக்கும் என பார்ப்போம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசிக்கு இன்று மிகவும் நல்ல நாளாக இருக்கும். நீங்கள் தொட்ட எல்லா வேலையும் வெற்றியை தரும். சில நாட்களாக தடைப்பட்டு வந்த வேலைகளை முடிக்க முடியும். இன்று தொழில் தொடர்பாக புதிய லாபகரமான திட்டங்களில் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. உங்கள் தொழில் தொடர்பான முதலீடுகள் மூலம் லாபத்தை பெற முடியும். குடும்ப உறவில் கவனம் செலுத்தவும். இன்று விட்டுக் கொடுத்து சென்றால் உறவுகள் இனிமையாக இருக்கும். நீண்ட நாட்களாக தொல்லை தந்த நோய் சற்று நிவாரணம் அடையும்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசியை சேர்ந்த பிறகு இன்று எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. பணியிடத்தில் உங்கள் வேலையை எச்சரிக்கையாக செய்வது நல்லது. இன்று உங்கள் எதிர்வினை மாற்றுவதைத் தவிர்ப்பது நல்லது. கோபத்தை குறைத்து நிதானமாக செயல்படவும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உங்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று மாணவர்கள் படிப்பில் கவனமாக செயல்பட வேண்டிய நாள். மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யவும்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசிக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி தேடி வரும். இன்று உங்கள் வேலையை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். வேலை தொடர்பாக பயணங்கள் செய்வீர்கள். உங்கள் உணர்ச்சிகளை சரியான வழிகளில் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தினருடன், நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். இன்று உங்கள் அணுகுமுறையில் கவனம் தேவை. உங்கள் வேலைகளை பட்டியலிட்டு செயல்படுவது நல்லது.
கடக ராசி பலன்
கடக ராசிக்கு இன்று மிகவும் நல்ல நாளாக இருக்கும். சில நாட்களாக தடைப்பட்டு வந்த வேலைகளை முடிக்க முடியும். வெற்றியின் உச்சத்தை அடைவீர்கள். வேலை தொடர்பாக பயணங்கள் சில வாய்ப்பு உண்டு. தொழில் தொடர்பாக பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இன்று நீதிமன்ற வழக்கு விஷயங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு இனிமையாக இருக்கும். உங்கள் உடல் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். முக்கிய முடிவு எடுப்பதில் துணையின் ஆதரவு கிடைக்கும்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசிக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். சந்திராஷ்டமம் நிறைந்த இன்று சவால்கள் சந்திப்பீர்கள். முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை. அதேபோல முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பணம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தவும். முடிந்தவரை சேமிக்கவும். ஆரோக்கியத்தில் கவனமும், உணவுகளை தேர்வு செய்து எடுத்துக் கொள்வது நல்லது. இன்று குடும்ப உறவுகளை அனுசரித்து செல்லவும். கடினமான நேரத்தில் நண்பர்களின் ஆலோசனை அல்லது அவர்களிடம் பேசுவதால் மன நிம்மதி கிடைக்கும். உங்கள் தொழில் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாள். பலவகையான எண்ணங்கள் மனதில் ஏற்படும். குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்துவீர்கள். இன்று என் நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும். குழப்பமான நேரத்தில் முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. இன்று பொறுமையுடன் செயல்பட்டால் இலக்குகளை அடைய முடியும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசிக்கு இன்று சாதகமான நாள். உங்கள் வேலையில் சிரமங்களை சந்தித்தாலும், எதிர்பார்த்தேன் வெற்றி கிடைக்கும். உங்கள் வேலையில் கடினமான உழைக்க வேண்டியது இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நல்லது. அலுவலக அரசியலில் இருந்து விலகி இருக்கவும். அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். இன்று பொழுதுபோக்கு விஷயங்களுக்காக அதிகமாக செலவிட வாய்ப்பு உண்டு. வண்டி வாகன சேர்க்கை உண்டாகும். பணத்தை சரியாக மேலாண்மை செய்வது நல்லது.
விருச்சிகம் ராசிபலன்
விருச்சிக ராசிக்கு இன்று நல்ல நாளாக அமையும். உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களிடமிருந்து சிறப்பான பரிசுகளை பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். துணையுடன் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். வேலை தொடர்பாக உற்சாகமாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யவும். இன்று வருமானம் சிறக்கும், அதே போல செலவுகளும் அதிகரிக்கும் என்பதால் கவனம் தேவை.
தனுசு ராசி பலன்
தனுசு ராசிக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். உங்கள் செயல்பாடுகளால் நல்ல பலன் பெறுவீர்கள். வெற்றி அதிகரிக்க கூடிய நாள். பொருளாதார நிலை முன்னேற்றம் தரும். வேலையில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று வருமானம் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். வாழ்க்கைத் துணையின் மூலம் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். இன்று காதல் மலரும். ஆரோக்கியம் மேம்படக்கூடிய நாள்.
மகரம் ராசிபலன்
மகர ராசிக்கு இன்று சாதகமான நாளாக இருக்காது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு சார்ந்த விஷயங்களில் கவனமாக இல்லாவிட்டால் உடல் நலத்தில் தொந்தரவுகள் ஏற்படும். இன்று தேவையான ஓய்வு எடுத்துக் கொள்ளவும். பணம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. செலவுகளை கட்டுப்படுத்தவும். நண்பர்கள், குடும்பத்தினரிடமிருந்து ஆதரவு கிடைக்கும். குழப்பமான நேரத்தில் அவர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவும். இன்று உங்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். பிறருக்கு அறிவுரை கூறுவதை தவிர்க்கவும்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசிக்கு இன்று மங்களகரமான நாள். உங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். மனமகிழ்ச்சி அதிகரிக்க கூடிய நாள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலையில் திட்டமிட்ட செயல்பாடு தேவைப்படும். மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெற வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் வேலை மற்றும் குடும்பம் சார்ந்த விஷயங்களில் மரியாதை அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். உங்களின் ஒவ்வொரு பணியையும் நம்பிக்கையுடன் செய்வது நல்லது.
மீன ராசி பலன்
மீன ராசிக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வேலையில் முன்னேற்றத்தை காண கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். உடல் நலனில் கவனம் தேவை சிலருக்கு வேலை பல காரணமாக மன அழுத்தத்தை சந்திக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் வார்த்தையில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதால் சக ஊழியர்களுடன் பிணக்குகளை தவிர்க்க முடியும். அலுவல அரசியலில் இருந்து விலகி இருக்கவும். அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று சுறுசுறுப்பாக செயல்பட உங்கள் செயல்களில் வெற்றி பெறுவீர்கள்.