இன்றைய ராசிபலன் 15.04.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 2, செவ்வாய்க் கிழமை, சந்திரன் துலாம், விருச்சிகராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் உள்ள ரேவதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான பலன் கிடைக்கக்கூடிய நாள். இன்று உங்களின் உடல் நலம் மோசமடையும். இன்று மருத்துவரை அணுகுவது நல்லது. நீங்கள் செய்யக்கூடிய தொழிலில் சிறப்பான லாபம் கிடைக்கும். இது உங்களின் நிதிநிலை மேம்படுத்தும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய நாள். குடும்பத்தினரின் முழு ஆதரவை பெறுவீர்கள். இன்று பிறரிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நெருங்கிய நண்பர்களின் ஆதரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று பிறர் ஆச்சரியப்படும் வகையில் செயல்படுவீர்கள். நண்பர்களுடன் விருந்து, விழாக்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. இன்று நிலுவையில் உள்ள பணிகளை சிறப்பாக நிறைவேற்ற முடியும். மரியாதை அதிகரிக்கக் கூடிய நாள். தொழிலில் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் சற்று தொந்தரவு தரக்கூடிய நாள். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று விட்டுக் கொடுத்து சொல்வது நல்லது. பேச்சை கட்டுப்படுத்துவது, இனிமையான வார்த்தைகளை பயன்படுத்துவது நல்லது. தொழில் தொடர்பாக அலைச்சல் ஏற்படும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வண்டி, வாகன பயன்பாட்டில் கூடுதல் கவனம் தேவை. இன்று மனம் அமைதியற்றதாக இருக்கும். இன்று உங்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான பலன் கிடைக்கக்கூடிய நாள். ஆரோக்கியம் மேம்படும். கடந்த சில நாட்களாக இருந்த கவலை தீரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். நீங்கள் செய்யக்கூடிய வேலை, தொழில் தொடர்பான முன்னேற்றமான சூழல் உருவாகும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான பலன் கிடைக்கக்கூடிய நாள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக காத்திருந்த சில நல்ல விஷயங்கள் நடக்கும். இன்று மிக நன்மைகள் அதிகரிக்க கூடிய நாள். தொழிலதிபர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் உருவாகும். சமூகத்தில் புகழ் அதிகரிக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று கடின உழைப்பிற்கான பலனை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் உங்கள் வேலையை முடிப்பதில் தொய்வு ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சண்டை சச்சரவுகளில் இருந்து விலகி இருக்கவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் திட்டமிட்ட பயணங்கள் சுப பலனை தரும். உங்களின் வருமானம் அதிகரிப்பதால் கடன் பிரச்சினை தீரும். இன்று தொழில், வியாபாரம் தொடர்பாக இழப்புகளை சந்திக்க நேரிடும். அதனால் பெரிய அளவில் முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும், எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எந்த துறையில் இருந்தாலும் அதில் வெற்றி உண்டாகும். புதிய வேலைக்கான முயற்சிகளில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்கள் எதிரிகளை தோற்கடிக்க முடியும். உடல் நலம் சற்று மோசமாக இருக்கும். உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இல்லையெனில் குடும்பத்தின் சூழ்நிலை பாதிக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். இன்று உங்கள் கடன் தொல்லை குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வேலையை தொடங்கினாலும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது நல்லது.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உடல் நலம் தொடர்பாக பின்னடைவு ஏற்படும். இன்று சில நிகழ்வுகளால் மன அழுத்தம் ஏற்படும். உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள். நீதிமன்றம் நடவடிக்கைகளில் கவனம் தேவை.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பழைய நோய்கள் மீண்டும் பாதிப்பை தர வாய்ப்புள்ளது. இன்று தேவையற்ற பயணங்கள் செல்வதை தவிர்க்கவும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிக்கவும். பேச்சில் இனிமையை கடைபிடிப்பதால் குடும்ப உறவு மேம்படும். இன்று சிலரின் உடல் நலம் தொடர்பாக வருத்தம் அதிகரிக்கும்.