இன்று ஆக 16, தேய்பிறை அஷ்டமி திதி, கிருஷ்ண ஜெயந்தி. மாய கண்ணன் அவதரித்த இன்று சந்திரன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார் இன்று கன்னி ராசியில் உள்ள அஸ்தம், சித்திரை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம். இன்று மிதுனம், கடகம் உள்ளிட்ட ராசிகளுக்கு நன்மை கிடைக்கும்.
மேஷ ராசி பலன்
மேஷ ராசிக்கு நல்ல நாளாக அமையும். உங்கள் வாழ்க்கையில் மன நிறைவு கிடைக்கக்கூடிய நாள். உங்கள் வேலை தொடர்பாக புதிய வாய்ப்புகளும், மரியாதையும் கிடைக்கும். முன்னர் செய்த முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். இன்று வேலை தொடர்பாக பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். சொத்து தொடர்பாக சில நல்ல விஷயங்கள் தேடி வரும். நீதிமன்ற வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சிலருக்கு காதல் மலரும். காதல் துணையுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்குமா. இன்று ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தவும்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசிக்கு சாதகமான சூழல் இருக்காது. எந்த ஒரு முடிவு எடுக்கும்போது சிந்தித்து செயல்படவும். உங்கள் வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். இன்று வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முயலவும். இன்று சுவாரசியமான பயணத்தை மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். இன்று எந்த ஒரு வேலையிலும் நேர்மறையான சிந்தனை உடன் செயல்படுவது அவசியம்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசிக்கு இன்று அழகான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் உண்டு. உங்களின் செயல்பாடுகள் பாராட்டு பெற்று இருக்கிறோம். இன்று உங்களின் ஆரோக்கியத்தை கவனித்து கொள்ள வேண்டிய நாள். திருமணம் வாழ்க்கையில் அன்பு நிறைந்திருக்கும். வேலை தேடுபவர்கள் மும்முரமாகச் செயல்படுவார்கள். இன்று உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
கடக ராசி பலன்
கடக ராசிக்கு இன்று சாதகமான சூழலில் இருக்காது. உங்கள் வேளையில் கவனமும், திட்டமிடலும் தேவை. சிந்தனையை தெளிவாக வைத்துக் கொள்ள முயலவும். பிறருடன் ஈகோ விடுத்து அனுசரித்துச் செல்லவும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தும் முதலீடு விஷயங்களில் கவனம் செலுத்தும். தொழில் தொடர்பாக புதிய திட்டமிடல் உங்களுக்கு வெற்றியை தரும். வணிகம் தொடர்பாக பயணங்கள் செல்கிறீர்கள். நீங்கள் எடுக்கும் முன் முயற்சிகள் சாதகமான பலனை தரும்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசிக்கு இன்று நல்ல நாளாக அமையும். இன்று பல பிரச்சினைகளை எதிர் கொண்டாலும், அதே சமாளித்து வெற்றி பெற முடியும். இன்று உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க சிரமங்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. உங்கள் திட்டமிடலில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள். இன்று சமூக நடவடிக்கையில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அதனால் உங்கள் மரியாதை அதிகரிக்கும். வேலையை வெற்றி அதிகரிக்க கூடிய நாள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்கு இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள். பணியிடத்தில் உங்கள் வேலையை முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். இன்று சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. இன்று குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்து சென்றால் பிரச்சனைகள் தீரும். உடல் நலம் தொடர்பாக பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. தொழில் தொடர்பாக புதிய திட்டங்களை செயல்படுத்த நினைப்பீர்கள். இன்று உங்களின் வருமானம் அதிகரித்தாலும், செலவுகளும் அதிகரிக்கும். இன்று முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. முடிந்தால் தவிர்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத சில நல்ல பலன்கள் கிடைக்கும். பொன்னான வாய்ப்புகள் நிறைந்த நாள். சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. இன்று நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசை நிறைவேறும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உங்கள் சிந்தனையில் நேர்மறை எண்ணம் அவசியம். வியாபாரம் தொடர்பாக திட்டமிட்டு செயல்படவும். பயணங்கள் பெரிய அளவில் சாதகமான பலன்கள் தராது. இன்று சமூக நடவடிக்கையில் ஆர்வத்துடன் பங்கேற்ப்பீர்கள். இன்று உங்கள் காதலை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசிக்கு இன்று ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். குடும்பப் பிரச்சினைகளை பேசி தீர்க்க முடியும். தேவையில்லாத சில மன வருத்தம் மனதில் இருக்கும். உங்கள் வேலையில் அர்ப்பணிப்பும், திட்டமிடலும் தேவைப்படும். நிதிநிலை ரீதியாக நல்ல பலனடைவீர்கள். இன்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. இன்று திருப்தியான நாளாக அமையும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசிக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும். உங்களுக்கு சிறந்த வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் வேலையில் சிரமங்கள் சந்தித்தாலும் அதில் வெற்றி பெற முடியும். தொழில் சார்ந்த விஷயங்களில் திட்டமிடல் தேவைப்படும். இன்று உங்கள் வியாபாரத்தில் புதிய யோசனைகளை செயல்படுத்துவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் துணையுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை எடுத்துக் கொள்வதும், எளிமையான உடற்பயிற்சியைச் செய்வதும் நல்லது.
மகர ராசி பலன்
மகர ராசிக்கு இன்று மிகவும் நல்ல நாளாக அமையும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி தரும் சில நிகழ்வுகள் நடக்கும். உங்கள் தொழிலை விரிவு படுத்துவதற்கான யோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி அல்லது சம்பள உயர்வு கிடைக்கக்கூடிய நாள். இன்று சொத்து தொடர்பாக பெரிய ஒப்பந்தங்கள் பெறுவீர்கள். வழக்கு விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். உங்கள் மனதில் காதல் உணர்வு அதிகரிக்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை.
கும்ப ராசி பலன்
கும்ப ராசிக்கு இன்று நல்ல நாளாக அமையும். அமையும். உங்கள் வாழ்க்கையில் புதிய உறவுகள் தொடங்க வாய்ப்பு உண்டு. திருமண உறவில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புதிய பொருட்களை வாங்க முற்படுவீர்கள். மாணவர்களுக்கு நல்ல நாளாக அமையும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் வெற்றி கிடைக்கும். இன்று புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் நன்மையை பெறுவீர்கள்.
மீன ராசி பலன்
மீன ராசிக்கு இன்று சாதகமான நாளாக இருக்காது. உங்கள் வேலையில் புதிய சவால்களை எதிர்க்கலாம் நேரிடும். இன்று வியாபாரத்தில் அருகே போட்டியை சந்திப்பீர்கள். புதிய வணிக வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற முதலீடுகள் செய்வது நல்லது. உணவு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் உடல்நலம் எடுத்துக் கொள்ளவும். எளிமையான உடற்பயிற்சி செய்யவும். இன்று உங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.