இன்று ஆகஸ்ட் 24, ஆவணி 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சந்திர பகவான் சிம்ம ராசியில் வந்திருக்கிறார். இன்று சந்திரனுக்கு 11 இல் குரு செஞ்சரிக்கும் வாசுமன யோகம் உருவாகிறது. இன்று மகர ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷம் ராசிபலன்
மேஷ ராசியை சேர்ந்தவர்கள் அவசரமாக எந்த ஒரு வேலையை செய்வதை தவிர்க்க வேண்டிய நாள். உங்கள் உறவுகளில் பிரிவினை தீரும். உங்களின் முக்கிய செயல்களை முடிப்பதில் இன்று நெருங்கியவர்களின் ஆதரவை பெறுவீர்கள். இன்று உங்கள் தவறுகளில் இருந்து படம் கற்றுக் கொள்வீர்கள். அவசரமாக எந்த ஒரு வேலையும் செய்ய வேண்டாம். நிதிநிலை சார்ந்த விஷயங்களில் புத்திசாலித்தனமாக செயல்படவும். ஆடம்பரப் பொருட்களை வாங்க அதிகமாக பணம் செலவிடுவீர்கள்.
ரிஷப ராசி பலன்
ரிஷபம் ராசிக்கு நல்ல நாளாக அமையும். புதிய சாதனைகள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வருமானத்திற்கும் செலவிற்கும் இடையே சம நிலையை பராமரிப்பது நல்லது. இன்று புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அரசாங்க வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு போன்ற நல்ல செய்திகளால் மகிழ்ச்சி அடைகிறீர்கள். உங்கள் துணை ஒரு தொழிலை தொடங்க ஊக்குவிப்பீர்கள். துணையின் மூலம் ஆதரவு கிடைக்கும். இன்று பெரியவர்களின் ஆலோசனைகளுக்கு உதவும்.
மிதுன ராசி பலன்
மிதுனம் ராசிக்கு இன்று செல்வாக்கு மற்றும் புகழ் அதிகரிக்கும். உதவியவர்களின் சொத்துக்கள் பெறுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய வருமான ஆதாரங்களை பெற வாய்ப்பு உண்டு. இன்று குழந்தைகள் மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். அவர்கள் முன்னேற்றம் தரக்கூடிய சில முக்கிய வேலைகளில் ஈடுபடுவார்கள். இன்று பணியிடத்தில் மேலதிகாரிகளை மிகவும் கவனமாக கையாளவும். கடினமான வேலைகளை முடிப்பதில் அவர்களின் ஆலோசனை உதவும்.
கடக ராசி பலன்
கடக ராசிக்கு இன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட தூர பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. பயணங்கள் நன்மை தரக்கூடியதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் உதவியாக உங்கள் வேலையில் முன்னேற்றம் பெற முடியும். லாபத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். வணிகத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். அதனால் எதிர்ப்பாராத சில நன்மைகள், லாபத்தை அடைவீர்கள். நண்பர்களிடம் இருந்து நல்ல செய்திகள் கேட்க முடியும்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசிக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். மக்களின் செல்வாக்கை பெறுவீர்கள். இன்று பிறரின் புகழ்ச்சிக்கு மயங்க வேண்டாம். இது பெரிய இழப்பை தர வாய்ப்பு உண்டு. இன்று ஆன்மீக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். அன்புக்குரியவர்களின் உதவியால் சில வேலைகளை சரியாக செய்த முடிக்க முடியும். இன்று எந்த ஒரு வேலையை செய்து செய்வதற்கு முன் திட்டமிடல் அவசியம். இல்லை எனில் தாமதப்பட வாய்ப்பு உண்டு.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்கு எந்த ஒரு வேலையை முடிப்பதில் திட்டமிடுதல் தேவை. குறிப்பாக குழுவாக செய்யக்கூடிய பணிகள் நல்ல பலனை தரும். இன்று உங்கள் மீதான நம்பகத்தன்மை மற்றும் மரியாதை அதிகரிக்கும். பணியிடத்தில் பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற முடியும். தொழில் தொடர்பாக ஏற்றம் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி சேர்ந்தவர்கள் பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை. இன்று யாரிடமும் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. பணம் தொடர்பாக கவனக்குறைவாக செயல்பட வேண்டாம். இன்று பணியிடத்தில் உங்கள் வேலையை முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். உங்களின் முடிவு எடுக்கும் திறன் சிறப்பாக இருக்கும். எந்த வேலையிலும் கவனக்குறைவாக இருப்பதை தவிர்க்கவும். இன்று குடும்பத்தில் சில மாத உறுப்பினர்களின் ஆலோசனை, உறவை வலுப்படுத்தவும் லாபத்தை பெறவும் உதவும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசிக்கு இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். பெரியவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கவும். இன்று நவீனகரமான விஷயங்களில் ஆர்வத்தை காட்டுவீர்கள். நண்பர்களிடமிருந்து சில தகவல்களை பெறலாம். இன்று நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று வியாபாரத்தில் ஆற்றலுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தை உருவாக்க முயற்சிப்பீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசிக்கு உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். இன்று புதிய வீடு வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி பெறலாம். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கை துணைக்கு துணையாகவும் ஆதரவாகவும் இருப்பீர்கள். வணிகம் தொடர்பாக எதிர்கொண்டு வரும் சிக்கல்களில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். இன்று மாணவர்களுக்கு படிப்பில் சில முன்னேற்றம் தரக்கூடிய சூழல் இருக்கும்.
மகர ராசி பலன்
மகர ராசியை சேர்ந்தவர்கள் சோம்பலை விடுத்து முன்னேறுவதற்காக போராடவும். இன்று பெரிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிலர் அது தொடர்பான பயணங்கள் சில நேரிடும். உங்கள் வேலை தொடர்பாக உங்களின் அனுபவங்கள் கைகொடுக்கும். இன்று குடும்பத்தில் நல்லுறவைப் பேணவும். சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசிக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இன்று உங்கள் அழகை கண்டு பிறர் ஆச்சரியப்படுவார்கள். இன்று வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்பத்தில் பரஸ்பர புரிதல் நன்றாக இருக்கும். உங்களின் வசதிகள் அதிகரிக்க கூடிய நாள். இன்று சில முக்கிய வேலைகளை முடிப்பதில் மூத்த அதிகாரிகள் உள்ளது உறுப்பினர்களின் உதவி தேவைப்படும். குடும்பத்தில் பரஸ்பர ஒத்துழைப்பு பெறுவீர்கள்.
மீன ராசி பலன்
மீன ராசி சேர்ந்தவர்களுக்கு படைப்புத்திறன் அதிகரிக்கும். உங்களுக்கு நற்பெயர் அதிகரிக்க கூடிய நாள். இன்று உங்களின் ஆளுமை திறன் அதிகரிக்க கூடிய நாளாக அமையும். வாழ்க்கை தரம் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சிறிய விஷயங்களை கூட செய்து முடிக்க அதிக ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். அதிகரித்து வரும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.