இன்று மே 28ம் தேதி, புதாதித்ய சுப யோகத்தால், மேஷம் மற்றும் தனுசு உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம் உண்டாகும். வேலையை செய்து முடிப்பில் அதிர்ஷம் ஏற்படும். துலாம், விருச்சிக ராசியினருக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். எந்த ராசிகளுக்கு வேலையிலும் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். உங்கள் மரியாதை அதிகரிக்கும். யார் கவனமாக இருக்க வேண்டும் என 12 ராசிகளுக்கு விரிவாக தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய நாள் நண்பர்களுடன் ஜாலியாக கழியும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் உங்களுக்கு நன்மைகள் தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடலாம். ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்தில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர் ஒருவரின் எதிர்காலம் சம்பந்தமாக முக்கியமான முடிவு எடுக்க வேண்டி நேரிடும், அதில் அவசரப்பட வேண்டாம். சொத்து தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு கஷ்டத்தை தரலாம். சரியான சட்ட வல்லுனரை அணுகுவது நல்லது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் முக்கியமான விஷயங்களை பற்றி கலந்து ஆலோசிக்க நல்ல தீர்வு கிடைக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக வெளிநாடு செல்ல திட்டமிட்டு கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். உங்களுடைய மதிப்பு, மரியாதை கூடும். அதனால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல், வீட்டில் சுப நிகழ்வுகள் போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். இன்று நிறைய செலவு செய்வீர்கள். உங்களுடைய வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்வது நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு இருந்தால், அது சரியாகிவிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சண்டை, பேசி தீர்ப்பது நல்லது.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலவையான பலன்கள் கிடைக்கும். ஏற்கனவே கடன் வாங்கி இருந்தால், அதை திருப்பி செலுத்த உங்களுக்கு நிதிநிலை மேம்படும். வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் செயல் பாராட்டப்படும். அதனால் சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களுடைய முக்கியமான பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். புதிய நபர்களுடன் பேசுவதன் மூலம், உங்களுடைய பிரச்சனைகளை எளிதாக தீர்க்க முடியும். உங்களுடைய வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப பொறுப்புகளை சரியாக முடிக்க முடியும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று கடின உழைப்பு தேவைப்படக்கூடிய நாள். கடினமாக உழைப்பும், வேலையில் கவனம் செலுத்தினால் தான் இன்று வெற்றி கிடைக்கும். அரசியல், அரசு துறையில் இருப்பவர்கள் செயலில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சகோதரர்களுடன் சண்டை வர வாய்ப்பு உள்ளது. அதனால் கவனமாக பேசுங்கள். உங்களுடைய திட்டங்கள் அல்லது வீட்டு விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இன்று உங்களுடைய கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும். உங்கள் முயற்சியில் தடைக்கு பின்னர் செய்து முடிக்க முடியும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் ஆன்மீக சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலந்து கொள்வீர்கள். அதனால் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலக வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் கருத்து வேறுபாடு, சண்டைகளால் அதை வெளியில் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. தவறான நபருக்கு ஆதரவு கொடுக்காதீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் வர வாய்ப்பு உள்ளது. உங்கள் வேலைகளை சரியாக திட்டமிட்டு செய்வது நல்லது. இல்லையெனில் எதிர்பார்த்த வேலை முடிக்க தாமதம் ஏற்படும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய நிதி நிலைமை வலுவடையும். புதிய திட்டங்களை போடவும், செயல்படுத்தவும் ஏற்ற நேரம். ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். அப்படி நம்பினால் வேலை தடைப்படலாம். கடன் வாங்க நினைத்தால், எளிதாக கிடைக்கும். குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு திருமணம் ஆகக்கூடிய வயதில் யாராவது இருந்தால், அவர்களுக்கு இன்று திருமண சம்பந்தமாக நல்ல செய்தி வரலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று திருமணம் ஆனவர்களுக்கு ஒரு நல்ல நாள்.என் வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது இன்று சரியாகிவிடும். உங்களுடைய வீட்டை பராமரிப்பது, அழகுபடுத்துவதில் கவனம் செலுத்துவீர்கள். அதற்காக செலவு செய்வீர்கள். உங்களுடைய வியாபாரம் தொடர்பான வேலைகளில் சில மாற்றங்கள் செய்ய திட்டமிடலாம். முதலீடு செய்ய நினைத்தால், அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. நிலுவையில் உள்ள வேலைகள் இன்று எளிதாக முடிக்க முடியும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டிய நாள். சூழ்நிலையை நன்றாக கவனித்து முடிவெடுப்பது எதிர்காலத்தில் நன்மை தரும். குடும்பத்தில் வயதான ஒருவரின் நல்ல அறிவுரை கிடைக்கும். சமூகம் தொடர்பான வேலை செய்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும். உங்களுடைய வாழ்க்கைத் துணையுடன் விட்டுக்கொடுத்த செல்ல வேண்டிய நாள். சில கருத்து வேறுபாடுகள் உள்ளது, உங்களுக்குள் கஷ்டமாக ஏற்படலாம். அதனால் சண்டை வர வாய்ப்பு உள்ளது. வியாபார விஷயமாக ஒரு சிறிய பயணம் செல்ல வாய்ப்பு உண்டு வாய்ப்பு உண்டு.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். உங்களுடைய நேரத்தையும், சக்தியையும் நல்ல விஷயங்களில் பயன்படுத்துவது நல்லது. ஏதாவது ஒரு திட்டம் தொடங்க நினைத்தால், இன்று நல்ல நாள். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அப்படி செய்தால் பிரச்சனை வரலாம். வேலையில் உங்களுடைய அணுகுமுறையை மாற்றி செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.. உங்களுடைய நல்ல குணத்தால், இன்று மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நல்ல கொள்கைகளை பின்பற்றினால், நல்ல பெயர் கிடைக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சில முக்கிய வேலைகளை முடிப்பதில் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்களின் உதவியுடன் படிப்பில் பிரச்சினைகளை தீர்க்க முடியும். நீங்கள் திட்டமிட்ட எந்த வேலையும் முடியாமல் போவதால், ஏமாற்றம் அடைவீர்கள். மற்றவர்களிடம் நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காமல் போகலாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுடைய பெற்றோர்களிடம் ஆலோசனை கேட்கலாம். குடும்பத்தில் யாருக்காவது திருமணம் தடைபட்டு இருந்தால், அது இன்று சரியாகிவிடும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வேலையில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில் செய்பவர்களுக்கு இன்று நல்ல வெற்றி கிடைக்கும். எந்த வேலையையும் பொறுப்புடன் செய்ய வேண்டும். இல்லையென்றால் பிரச்சனை வரலாம். காதல் வாழ்க்கையில் இருப்பவர்கள், தங்களுடைய காதலை ஆழமாக உணர்வார்கள். உங்களுடைய துணையுடன் இனிய பயணம் போகலாம். அதிகமான பொறுப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். அப்படி எடுத்துக்கொண்டால், சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். இன்று முதலீடு விஷயங்களை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக பிறகு தங்களுடைய வேலையில் முதலீடு செய்ய சொன்னால் அதை செய்ய வேண்டாம். சில வேலைகள் முடியாமல் போவதால், ஏமாற்றம் அடைவீர்கள். உங்களுடைய குழந்தைகளை அதிகமாக கட்டுப்படுத்த வேண்டாம். அப்படி செய்தால், வீட்டில் அமைதியற்ற சூழல் ஏற்படும். மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.