Home » இன்றைய ராசி பலன் – 29-09-2025

இன்றைய ராசி பலன் – 29-09-2025

by newsteam
0 comments
இன்றைய ராசி பலன் - 29-09-2025

இன்று திங்கட் கிழமை செப்டம்பர் 29ம் தேதி உருவாகக்கூடிய சௌபாக்கிய யோகம் காரணமாக சில ராசியினருக்கு தொழில், வியாபாரம், வேலை தொடர்பான நன்மை அதிகம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் பெற உள்ள, சொத்து சேரும் ராசிகளை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசிபலன்

மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று ஒவ்வொரு முயற்சியிலும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியும். இன்று உங்கள் மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். இன்று உங்கள் உடல் நலம் தொடர்பாக சிறிய அளவில் பிரச்சனைகளை சந்திக்க நேரமில்லை கவனமாக இருக்கவும். இன்று மாணவர்கள் எடுத்துக்காட்டாக அதிக கருத்துக்கள் இருக்க வேண்டும். கல்வி விஷயத்தில் செலவுகள் அதிகரிக்கும். இன்று குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக சிறிய அளவில் கவலைகள் ஏற்படும். இன்று குடும்பத்தின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்வீர்கள்.

ரிஷப ராசி பலன்

mc39

ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக முடிக்கப்படாத பணிகளை முடிக்க வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். இன்று சோம்பலையை விடுத்து முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டிய நாள். இன்று சமூகத்தில் மரியாதை அதிகரிக்க கூடிய நாள். உங்களின் செயல்பாடு குடும்பத்தில் மகிழ்ச்சி அடைய செய்யும். இன்று உங்களின் மனதில் நிலை வலுவாக இருக்கும். எதிரிகளை தோற்கடிக்க எச்சரிக்கையாக செயல்படவும்.

மிதுன ராசி பலன்

மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு பிள்ளைகளின் தொழில் தொடர்பான முயற்சிகளுக்கு உதவுவீர்கள். இன்று வெளிநாட்டில் தொழில் செய்யக்கூடிய நபர்களுக்கு நல்ல லாபம் சேரும். இன்று உங்களுடைய திறமையை மேம்படுத்துவதற்காகவும், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவோம் முயற்சி செய்ய வேண்டிய நாள். இன்று உங்கள் துணை ஆரோக்கியம் மற்றும் அழகு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.. அவருக்கு பரிசு வழங்க நினைப்பீர்கள். இன்று பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் முக்கிய வேலைகளை செய்து முடிக்கலாம்.

கடக ராசி பலன்கள்
கடக ராசி பலன்கள்
கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று சட்டம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்கவும். பழைய சட்ட விவகாரங்கள் மீண்டும் தலை தூக்கும். பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக சூழலை கையாள வேண்டும். தொழிலதிபர்கள் நிதி நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். இன்று உங்களோடு வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றத்தை காண்கிறீர்கள். மாணவர்கள் வெற்றி அடைய கடினமாக உழைக்க வேண்டிய நாளாக இருக்கும்.

சிம்ம ராசி பலன்

சிம்ம ராசியினர் இன்று சுற்றுலா செல்ல அல்லது பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று உங்களின் செல்வாக்கு அதிகரிக்க கூடிய நாள். உங்களுக்கு மரியாதை, பதவி, கௌரவம் அதிகரிக்க கூடிய நாள். இன்று உங்கள் மாமியார் உறவு மேம்படும்.இன்று புதிய நபர்களின் ஆலோசனை பேரில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். இன்று உங்கள் குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். இன்று வெளியிடத்தில் உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கவும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று சில விஷயங்களுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவது தொடர்பாக செலவுகள் அதிகரிக்கும். இன்று உங்களின் நிதிநிலை சற்றே கவலை தரக்கூடியதாக இருக்கும். இன்று உங்களின் எதிர்காலம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளிடம் இருந்து சில நல்ல செய்திகள் பெறுவீர்கள். உங்கள் சகோதரனின் ஆலோசனை தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும். உங்கள் வாழ்க்கை துணை என உடல் நலம் சற்று கவலை தரக்கூடியதாக இருக்கும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று ஓரளவு சாதகமான பலன்கள் தரும். இன்று எந்த ஒரு விவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். இல்லையெனில் அது உங்களுக்கு சிக்கலை தரக்கூடியதாக அமையும். உங்கள் தாயுடன் உறவு மேம்படக்கூடியதாக இருக்கும். இன்று எந்த செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். மாணவர்கள் தேர்வு தொடர்பாக சிறப்பாக செயல்படுவார்கள். உங்களின் அண்டை வீட்டாருடன் இணக்கமான சூழல் இருக்கும்.

விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று சமூகம் மற்றும் அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு மிகவும் சாதகமான நாளாக அமையும். உங்கள் தொழில் தொடர்பாக புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். குடும்பத்தில் வணிகம் சார்ந்த விஷயங்களில் கிடைக்கும் ஆலோசனையின் நல்ல பலன் பெறக்கூடியதாக இருக்கும். இன்று அனுபவம் வாய்ந்த ஒருவரின் ஆலோசனை உங்களுக்கு உதவும். உங்கள் குழந்தைகளின் உடல் நல ரீதியான பிரச்சினைகள் ஏற்படலாம். இது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். நீண்ட காலமாக சொத்து வாங்க திட்டமிட்டுள்ள நபர்களின் கனவு நிறைவேறும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு அனைத்து விதத்திலும் உங்களுக்கு நிதி நிலையம் மேம்படுத்த கூடியதாக இருக்கும். உங்கள் குடும்பத்தினரின் மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். இன்று உங்கள் குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் பிள்ளைகளின் திருமணம் தொடர்பான விஷயங்களில் நல்ல தகவல் கிடைக்கும். உங்கள் மனைவியின் அன்பை ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கையில் உறவு வலுவாக இருக்கும். உங்கள் படிப்பில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

மகர ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு அன்றாட தேவைக்காக சில பொருட்களை வாங்க செலவிடுவீர்கள். இது உங்கள் நிதி சுமையை அதிகரிக்கும். வேலைக்கான முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு வெளியே தொடர்பான வர்த்தகம் செய்யக்கூடிய நபர்களுக்கு லாபம் அதிகரிக்க கூடிய நாள். இன்று உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். உங்கள் மாமனார் அல்லது மாமியாருடன் உறவு மேம்படும். உங்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய நாள்.

கும்ப ராசி பலன்

கும்ப ராசி நண்பர்களுக்கு குழந்தைகளையும் செயல்பாடு உங்களுக்கு மரியாதை பெற்று தரும். உங்களின் சமூக அந்தஸ்து மற்றும் கௌரவம் அதிகரிக்கும். உங்கள் வேலை தொடர்பாக எதிரிகளின் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். ஒன்று உங்களின் பழைய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அன்புக்குரியவர்களுடன் பேசி மகிழ்கிறேன். வணிகம் தொடர்பாக துணை ஆலோசனை முன்னேற்றத்தை தரும். இன்று உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் குறித்து விவாதம் நடக்கும்.

மீன ராசி பலன்

மீன ராசி சேர்ந்தவர்களுக்கு கூட்டு தொழில் செய்யக்கூடிய நபர்களுக்கு லாபம் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு பல இடங்களில் இருந்து ஆதரவு கிடைக்கும். உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை தீரும். இன்று வீட்டில் ஆன்மீக சுப நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இன்று உங்கள் நண்பர்களுக்கு உதவுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். இன்று உங்கள் பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!