இன்று சந்திரன் கன்னி ராசியில் பயணிக்கிறார். கும்ப ராசிக்கு சதயம், பூரட்டாதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ள நாள். இன்று உருவாகும் புதாதித்ய யோகம், ரவி யோகத்தால் விநாயக பெருமானின் நல்லருள் கிடைக்கும். இன்று விருச்சிகம், மகரம் உள்ளிட்ட ராசிகளுக்கு அற்புத பலன்கள் கிடைக்கும்.
மேஷ ராசி பலன்
மேஷ ராசிக்கு, லாபகரமான நாளாக அமையும்.இன்று புதிய வழிகளில் பணத்தை சம்பாதிக்க வாய்ப்பு உண்டு. அதை சேமிக்கவும் முடியும். இன்று நிதி சார்ந்த விஷயங்களில் நிதானம் அவசியம். இன்று பணம் மற்றும் வேலை தொடர்பாக நீங்கள் எதிர்பார்த்த நல்ல சூழல் உருவாகும், பிள்ளைகளின் கல்வி அல்லது வேலை தொடர்பாக சிரமங்களை தாண்டுவீர்கள், தொழில் தொடர்பான விஷயத்தில் நல்ல செய்தி தேடி வரும். நண்பர்களிடமிருந்து முழு ஆதரவை எதிர்பார்க்கலாம். இன்று உங்களின் ஆடம்பரத்தைத் தவிர்க்கவும்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று நன்மை கிடைக்கக்கூடிய நாளாக அமையும். உங்களின் நேர்மறையான செயல்பாடு வெற்றிக்கு வழிவகுக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் பெறுவீர்கள். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டிய நாள் வேலை, வியாபாரம் தொடர்பாக கூட்டு முயற்சிகள் வெற்றியைத் தரும், திடீரென ஏதேனும் ஒரு வழியில் லாபத்தை சம்பாதிக்க வாய்ப்புகள் உண்டாகும், வேலை தொடர்பான திட்டங்கள் மாற்ற வேண்டிய சூழல் இருக்கும், காதல் விஷயத்தில் நிதானமாகச் செயல்படவும், குடும்ப விஷயத்தில் நல்ல தகவல்கள் கிடைக்கும்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசிக்கு இன்று வேலையில் வெற்றி தேடி வரும். அரசு தொடர்பான வேலைகளில் எதிர்பார்த்த நன்மை பெறுவீர்கள். உங்களின் பொறுப்புக்கள் அதிகரிக்கும். வேலையில் இருந்து தடைகள் நீங்கும். அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டாக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். உங்களின் பேச்சுத்திறனால் நன்மையை அடைவீர்கள். தந்தை அல்லது தந்தைக்கு நிகரான நபர்களிடமிருந்து அல்லது யோசனைகள் கிடைக்கும். கலைத்துறையில் உள்ளவர்கள் புதிய விஷயங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொள்வீர்கள்.
கடக ராசி பலன்
கடக ராசிக்கு இன்று பணியிடத்தில் லாபமும் முன்னேற்றமும் நிறைந்த நாளாக அமையும். இன்று கடினமான சூழலாக இருந்தாலும் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் யோசனைகளால் முன்னேற்றம் எதிர்பார்க்கலாம். உங்களின் யோசனைகளுக்கு மரியாதை உண்டாகும். அரசு துறையில் இருப்பவர்கள் சில சிக்கலை சந்திக்க வாய்ப்பு உண்டு. உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பிறரின் ஆலோசனை அல்லது செல்வாக்கின் கீழ் எந்த ஒரு முதலீடுகளையும் தவிர்க்கவும். காதல் வாழ்க்கையில் சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் காதல் ஒரு உடன் இனிமையாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசிக்கு இன்று நன்மைகள் அதிகமாக நடக்கும். உங்கள் வேலையை முடிப்பதில் தீவிரமாக இருப்பீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமையும். இன்று தந்தையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் கிடைக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளில் எதிர்பார்த்த நன்மை அடைய முடியும். இன்று பிறருக்கு உதவ முன்வருவீர்கள். சுப வேலைகளுக்காக பணத்தை அதிகமாக செலவிட வாய்ப்பு உண்டு. தடைப்பட்ட வேலைகளை முடிக்க முடியும். சில முக்கிய விஷயங்களில் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்கு இன்று கலவையான மற்றும் குழப்பமான ஆளாக அமையும். பணம் சார்ந்த விஷயங்களில் ஆசை அதிகரிக்கும் அதே சமயம் அதற்கான முயற்சிகளும் அதிகரிப்பீர்கள். இன்று எதிர்காலத்தில் நல்ல பலனை தரக்கூடிய சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் வேலை தொடர்பாக புதிய வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் நிதானமாக செயல்படவும். தொழில் தொடர்பாக நீங்கள் எதிர் கொண்டு வரக்கூடிய பிரச்சனைகள் நீங்கும்.. குடும்பத்தில் பிறரின் அன்பை ஆதரவு தெரிவிப்பீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி சேர்ந்தவர்கள் இன்று உங்கள் வேலையை முடிக்க தீவிரமாக செயல்படுவீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கான நற்பலனும் கிடைக்கும். நிதி விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. பிறரிடம் சிக்கி உள்ள உங்களின் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்று பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். அதற்காக செலவுகள் செய்ய வாய்ப்பு உண்டு. இன்று நண்பர்கள் இருந்து உறவினர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். அதன் மூலம் சில முக்கிய வேலைகளை முடிக்க முடியும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். சமூக பணிகளில் ஆர்வம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசி இன்று பணியிடத்தில் எச்சரிக்கையாக வேலைகளை முடிக்கவும். கடினமான விஷய மேலதிகாரிகளின் ஆலோசனை பெறுவது நல்லது. இன்று நண்பர்கள் மற்றும் சகோதரிகளிடம் இருந்து உதவிகள் கிடைக்கும், அதிக ஆசைப்படுவதைத் தவிர்க்கவும், காதல் விஷயத்தில் இணக்கமான சூழல் இருக்கும், உங்கள் கிடைக்கும். இன்று உங்களுக்கு விருப்பமான உணவை உண்டு மகிழ்வீர்கள். சிலருக்கு திடீர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு.
தனுசு ராசி பலன்
தனுசு ராசிக்கு உங்களின் தொழில் தொடர்பான யோசனைகள் நற்பலனை தரும். அனுபவசாலிகள் உதவிகள் கிடைக்கும். அவர்களின் அறிவை பயன்படுத்திக் கொள்ளுங்கள். முக்கியமான வேலைகளை எதிர்பார்த்த வகையில் முடிக்க முடியும். வேலை தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் உங்களின் யோசனைகள் வரவேற்கப்படும். இன்று வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்ப பொறுப்புகள் அதிகமாக இருக்கும் அதை எளிதாக சமாளிக்க வாய்ப்புகளும் இருக்கும்.
மகர ராசி பலன்
மகர ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று வேலை, குடும்பம் தொடர்பாக பொறுப்புகள் அதிகரிக்கும். அதை நிறைவேற்றுவதற்காகக் கடினமாக உழைப்பீர்கள். இன்று நிதி நன்மைகள் அதிகரிக்கும். அரசியல் தொடர்புடையவர்களுக்கு கௌரவம் கிடைக்கும். இன்று உங்களின் உணவு வழக்கத்தில் கவனம் தேவை. வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. முக்கிய விஷயங்களை நிதானமாக சிந்தித்து செயல்படவும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். ஆசிரியர் தொழிலில் நற்பெயர் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசிக்கு இன்றைய எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். நிதி சார்ந்த திட்டங்களில் கவனம் தேவை. இன்று சந்திராஷ்டமம் உள்ளதால் நிதானமாக செயல்படவும். அவசர முடிவுகள் சில இழப்புகளை சந்திக்க நேரிடும். அதனால் பொறுமையுடன் செயல்படவும். இக்கட்டான நேரத்தில் தந்தையின் ஆலோசனை உதவும். குடும்பத்தினரின் அன்பை ஆதரவையும் பெறுவீர்கள். காதல் விஷயத்தில் உங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். இல்லை தேவையற்ற கருத்து வேறுபாடுகள் பிரிவு ஏற்படும். இன்று புதிய பொருட்களை வாங்க அதிகமாக செலவிடுவீர்கள்.
மீன ராசி பலன்
மீன ராசி சேர்ந்தவர்களுக்கு உங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் இருக்கக்கூடிய துணிச்சலான முடிவுகள் மூலம் மனிதர்களுக்கு நல்ல பலனை பெறுவீர்கள். எதிரிகள் உங்களுக்கு தீங்கு செய்ய வாய்ப்பு உண்டு.. வேலை தொடர்பாக சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் வேலை தொடர்பான தடைகள் சென்று கவலைப்படும். முக்கிய வேலைகளை பொறுப்புடன் செய்து முடிப்பது நல்லது. இன்று வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நல்ல தகவல் தேடி வரும்.