Home ஜோதிடம் இன்றைய ராசி பலன் – 30-08-2025

இன்றைய ராசி பலன் – 30-08-2025

0
இன்றைய ராசி பலன் 30 ஆகஸ்ட் 2025

இன்று ஆகஸ்ட் 30, சனிக்கிழமை, சந்திர பகவான் விருச்சிக ராசியில் விசாகம், அனுஷம் நட்சத்திரத்தில் இருப்பார். இன்று உருவாகும் வாசுமன் யோகத்தால் பல ராசிகளுக்கு தொட்டதெல்லாம் வெற்றி தரும். இன்று சித்த யோகம் கூடிய தினத்தில் மீனம், மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது.

மேஷ ராசி பலன்

இன்று உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரக்கூடிய நாள். உத்தியோகதர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. இன்று உங்களின் நிதிநிலை முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள். சிலருக்கு மீண்டும் தூர பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. எந்த வேடிக்கை முடிப்பதிலும் உங்களுக்கு தைரியம், வீரமும் துணை நிற்கும். உங்கள் மனதில் எதிர்மறையான எண்ணங்களை தவிர இருக்க வேண்டியது அவசியம். இன்று உங்கள் வேலை குடும்பம் தொடர்பாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மிகவும் பொறுமையான மனநிலையில் எதிர்கொள்வது நல்லது.

ரிஷப ராசி பலன்

ரிஷப ராசிக்கு இன்று மரியாதை அதிகரிக்க கூடிய நாள். உங்கள் குடும்பத்தில் நடந்த வரும் பிரச்சனைகள், சண்டைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இன்று உடன்பிறந்தவர்களிடமிருந்து சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பல மூலங்களிலிருந்து உங்களுக்கு வருமானம் சேர வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் நடக்கும். அதனால் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். இன்று தொலைதூரத்தில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். பணம் தொடர்பான துறையில் பணிபுரிபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். சிலர் சேமிப்பு திட்டங்களை சேருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

மிதுன ராசி பலன்

மிதுன ராசிக்கு சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். உங்கள் வீட்டிலும் வெளியிலும் நெருங்கியவர்களின் நம்பிக்கையே பெறுவீர்கள். யாரிடமும் அதிகம் பேசுவதை தவிர்ப்பதோடு, தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பணியிடத்தில் சிறப்பான சூழலில் நிலவும். கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டிய நாள். தொழிலதிபர்கள் பிரச்சினையை கண்டு துவலாமல், நடந்து கொள்வது நல்லது. உங்கள் தொழில் தொடர்பான விஷயத்தில் பிரச்சினைகளை வணங்குவதில் கவனமும், பணியாளர்களிடம் மென்மையாகவும் நடந்து கொள்வதால் மரியாதை அதிகரிக்கும். உங்கள் பொறுப்புகளை சரியாக முடிக்க முடியும்.

கடக ராசி பலன்

இன்று வேலை தேடக்கூடிய கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு சாதகமான நல்ல பதில் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. மாணவர்கள் மற்ற நாட்களை விட இன்று படிப்பில் மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள். பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பாக சில ஒப்பந்தங்களைச் செய்ய வாய்ப்பு உண்டு. சிலரின் மூலம் ரகசிய தகவல்கள் கிடைக்கும். இன்று உங்கள் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும்.

சிம்ம ராசி பலன்

சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு முடிவெடுக்கும் திறன் சிறப்பாக இருக்கும். உங்கள் முயற்சிகளுக்கான முழு பலனை பெறுவீர்கள். இன்று உங்களின் வருமானம் அதிகரிக்கும். வருமா நீண்ட நாட்களாக நீங்கள் விரும்பிய சில விஷயங்கள் இன்று நடக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவை பெறுவீர்கள் . இன்று தாய் வழி சொந்தங்களும் மூலம் நிதி நன்மைகள் கிடைக்கும். பெற்றோர்களுக்காகச் சிறிது நேரத்தை செலவிட வேண்டிய நாள். இன்று உங்களுக்கு மன அமைதி அதிகரிக்கும்.

கன்னி ராசிபலன்

உங்கள் பதவி உயர்வு பெறக்கூடிய நாளாக கன்னி ராசியினருக்கு இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை இன்று பெறுவீர்கள். நீங்கள் செய்யும் தொழில், வேலை தொடர்பாக பல வாய்ப்புகளை பெறுவீர்கள். கடினமான நேரத்தில் உங்களுக்கு நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். இன்று அனுபவம் வாய்ந்தவர்களின் அறிமுகம் பெறுவீர்கள். சட்டம் சார்ந்த விஷயங்களில் எதிர்கொண்ட மன உளைச்சலில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். இன்று புதிய நபர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று நல்ல நாளாக அமையும்.. உங்களின் பழைய திட்டங்கள், கடின உழைப்பிற்கான நல்ல பலனை பெறுவீர்கள். குடும்பத்தில் தாராளமான பன்மை காரணமாக மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த நல்ல லாபம் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு உங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதில் கவனம் தேவை. சிலர் விவாதங்களில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.பயணங்கள் நல்ல பலனை தரக்கூடியதாக அமையும்.

விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு திடீர் நன்மை கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். இன்று உடல்நலம் தொடர்பான எந்த ஒரு பிரச்சினையும் புறக்கணிக்க வேண்டாம். உங்கள் வாழ்க்கை துணையின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று அனைவரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. எதிரிகள் இன்று உங்களுக்கு தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. சட்டம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி சேர்ந்தவர்களுக்கு கடின உழைப்பு தேவைப்படக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய தொழில் தொடர்பாக சரியான நேரத்தில் முடிவுகளை எடுப்பீர்கள். இது பிறரை ஆச்சரியப்படுத்தும். இன்று நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த தடைகள் நீங்கும். உங்கள் துணை உடன் நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் தனியாக இருக்கும் நபர்களுக்கு, அவர்கள் விருப்பப்படி நல்ல வரன் அமையும். காதல் உறவு மேம்படக்கூடிய நாள்.

மகர ராசி பலன்

மகர ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களின் ஆற்றலை சரியாக பயன்படுத்துகிறீர்கள். இன்று உங்கள் குடும்பப் பொறுப்புக்கள், வேலைகளில் நிறைவேற்றுவதில் சரியான பாதையில் பயணிப்பீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று முதியவர்களையும், இளையவர்களையும் மதித்து நடக்கவும். இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. அதனால் பட்ஜெட் போட்டு செயல்படுவது அவசியம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதோடு பிரச்சனை தரக்கூடிய நபர்களிடம் கவனமான அணுகுமுறை தேவை.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி சேர்ந்தவர்களின் கலைத்திறன் அதிகரிக்கும். இன்று எந்த ஒரு வேலையையும் மிகவும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். அதனால் மனம் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்களின் குடும்ப சூழல் மற்றும் பணியிடத்தில் சூழ்நிலையை மிகவும் கட்டுப்பாட்டுடன் அணுகுவது நல்லது. அனைவரிடமும் இனிமையாக பழக வேண்டிய நாள். இன்று உங்கள் நண்பர்களிடம் நேரத்தை செலவிடுவீர்கள். தேர்வுக்கு தயாராக கூடிய மாணவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று பெற்றோருடன் நேரத்தை செலவிட முயலவும். அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும்.

மீன ராசி பலன்

மீன ராசிக்கு உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சில நாட்களாக இருந்த பிரச்சனைகள் குறையும். புதிய சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற விருப்பங்கள் நிறைவேறும். பெற்றோர் பெரியவர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவும். குடும்பத்தில் யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். நண்பர்கள், உறவினர்களே சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளை முடித்து மகிழ்வீர்கள். பணம் சம்பாதிப்பதற்கான பல வழிகளில் பிறக்கும். தேவையற்ற பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டிய நாள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version