இன்று ஆக 31, அஷ்டமி திதியில் ராதாஷ்டமி யோக தினத்தில் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். இன்று மேஷ ராசியில் உள்ள அஸ்வினி, பரணி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. சூரிய அருளால் யாருக்கெல்லாம் யோகம் சேரும் என பார்ப்போம்.
மேஷம் ராசிபலன்
மேஷ ராசிக்கு இன்று வேலை தொடர்பாக மிகவும் கவனமாக செயல்படவும். இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை. உங்கள் தொழில் தொடர்பாக பிறரை அனுசரித்துச் செல்வது அவசியம். முக்கியமான வேலைகளை முடிப்பதற்காக திட்டமிட்டுக் கொள்ளவும். இன்று உங்கள் கருத்துக்களை தெளிவாக முன் வைக்கவும். உங்கள் வேலை தொடர்பாக பயணங்கள் சில வாய்ப்பு உண்டு. இன்று அலைச்சலும் சோர்வும் அதிகமாக இருக்கும்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசிக்கு இன்று மகிழ்ச்சியும், செல்வ செழிப்பும் அதிகரிக்க கூடிய நாள். இன்று சண்டை சச்சரவுகளில் இருந்து விலகி இருக்கவும். குடும்ப உறுப்பினரின் பதவி உயர்வு, ஓய்வு போன்ற விஷயங்களுக்காக விருந்துகள் ஏற்பாடு செய்வீர்கள். இன்று வணிகத்தில் பெரிய லாபத்தை பெற வாய்ப்பு உண்டு. இந்த மூதாதையர் சொத்துக்கள் தொடர்பாக சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்று குடும்ப பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றும் முயற்சி செய்யவும்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசிக்கு இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் பணி இடத்தில் இனிமையான பேச்சால் பிறரை எளிதாக சமாளிக்க முடியும். இன்று அவசரப்பட்டு இன்று முடிவையும் எடுக்க வேண்டாம். இன்று வீட்டை விட்டு வெளியில் வசிக்கக்கூடிய நபர்கள் மீண்டும் குடும்பத்தினருடன் இணைய வாய்ப்பு உண்டு. இன்று குழுவாக செய்யக்கூடிய வேலைகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்கள் நினைத்த ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் உண்டு.
கடக ராசி பலன்
கடக ராசிக்கு இன்று லாபம் அதிகரிக்க கூடிய நாள். இன்று வீட்டில் சுப காரியங்கள், ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்பு போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். இன்று எந்த விஷயத்திலும் உங்களிடம் புத்திசாலித்தனம் வெளிப்படும். இன்று எந்த ஒரு வதந்திகளிலும் ஈடுபட வேண்டும். நிதி சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். உங்களுக்கு அதிகரித்து வரும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். பழைய நண்பர்களே நீண்ட காலத்திற்கு பின்னர் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசிக்கு இன்று செல்வம் அதிகரிக்க கூடிய நாள். உங்களின் நிதிநிலை தொடர்பான கவலைகள் தீரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க சாதகமான நாள். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். காதல் தொடர்பான வாக்குவாதங்களை தவிர்க்கவும். இன்று பிறர் கூறும் கருத்துக்களை கேட்ட பின்னரே எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவும்.இன்று வருமானம் அதிகரிக்கும். இருப்பினும் எந்த ஒரு செலவுகளை மிகவும் கவனமாக செய்வது அவசியம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு செல்வாக்கு மற்றும் கௌரவம் அதிகரிக்கும். மேலும் அதிகாரிகளிடம் இருந்து முழு ஆதரவை பெறுவீர்கள். குடும்ப பொறுப்புகளை முடிப்பதில் உங்கள் துணையின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிறைந்திருக்கும். இன்று சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வேலைகள் வேகமாக முடிக்க முடியும். பணியிடத்திலும் குடும்பத்திலும் உங்களின் பழைய தவறுகளை திருத்தி நல்ல வழியில் செயல்படுவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி சேர்ந்தவர்கள் ஆன்மீக தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனம் செலுத்துவீர்கள். என்று கல்வி அல்லது உங்கள் தொழில் தொடர்பாக பயணங்கள் செல்ல வாய்ப்புகள் உண்டு. மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். என்று குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினருடன் சேர்ந்து முக்கிய குடும்ப சடங்குகளை செய்து முடிப்பீர்கள். இதற்கு வீடு, வேலை தொடர்பாக இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைக்கும். இன்று நல்ல சிந்தனையுடன் செயல்படுவீர்கள். உங்கள் மனதில் உள்ள சோகங்கள் விலகும். என்று சிலரின் தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று எந்த விஷயத்திலும் பொறுமையையும், பணிவாகவும் நடந்து கொள்வது நல்லது. உங்கள் பேச்சில் மென்மையை கடைப்பிடிப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். எந்தவித தவறான திட்டங்களிலும் பணம் முதலீடு செய்ய வேண்டாம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும்.. கூட்டாக செய்யக்கூடிய எந்த ஒரு வேலையிலும் நல்ல பலன் பெறுவீர்கள். உங்களின் பொறுப்புகள் அதிகரிக்க கூடிய நாள். குடும்பத்திலும், பணியிடத்திலும் உங்களைப் புகழ வாய்ப்பு உண்டு. திருமண வாழ்க்கையில் துணையின் ஆதரவு பெறுவீர்கள். குடும்பத்தினரின் பரஸ்பர ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்க கூடிய நாள்.
மகர ராசி பலன்
மகர ராசி சேர்ந்தவர்கள் இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.உங்கள் பணியிடத்தில் உள்ள விதிமுறைகளை சரியாக பின்பற்றி நடக்கவும். கடினமான நேரத்தில் உங்களுக்கு தேவைப்படும் ஆலோசனையை அனுபவம் வாய்ந்தவர்களிடம் கேட்பது நல்லது. இன்று உங்கள் வேலைகளை முடிக்க கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவைப்படும். உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் விஷயத்தில் கவனம் தேவை. இல்லையெனில் அது பெரிய பிரச்சனைக்கு கொண்டு செல்லும்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று தைரியமும் வீரமும் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பாக நல்ல லாபம் பெறுவீர்கள். உங்களின் நிதி நிலைமையும் மேம்படும். பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெற வாய்ப்பு உண்டு. இன்று மூத்த நபர்களின் வார்த்தைகளை கேட்டு பின்பற்றுவது நல்லது. இந்த ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேற வாய்ப்பு உண்டு. நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
மீன ராசி பலன்
மீன ராசி சேர்ந்தவர்களுக்கு தொழில் தொடர்பாக பெரிய லாபம் கிடைக்கும். உங்கள் செயல்பாடுகளில் சாதனை படைப்பீர்கள். உலக இன்பங்களை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சில நல்ல சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த நாள் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஒரு வண்டி, வாகனம் வாங்க கூடிய ஆசைகள் நிறைவேறும். இன்று அவசரப்பட்டு அல்லது கோபத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். பிறரிடம் நன்றாக நடந்து கொள்ளவும்.