Home » இலங்கையில் உள்ள மாணவர்களுக்கான அடையாள அட்டை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

இலங்கையில் உள்ள மாணவர்களுக்கான அடையாள அட்டை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

by newsteam
0 comments
இலங்கையில் உள்ள மாணவர்களுக்கான அடையாள அட்டை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது.
பாடசாலை நிர்வாகத்தை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பில், அடுத்த ஆண்டு ஒவ்வொரு மாணவருக்கும் விரிவான டிஜிட்டல் பதிவுகள் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் பிறப்புச் சான்றிதழ், பரீட்சை முடிவுகள், திறன்கள் அடங்கிய தனிப்பட்ட தரவு கோப்பு, தனித்துவமான அடையாள அட்டையுடன் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய அரசாங்காத்தின் வருகையை தொடர்ந்து டிஜிட்டல் அடையாள அட்டையை ஏப்ரல் மாதத்தின் பின் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுமென டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!