Tuesday, July 15, 2025
Homeஇலங்கைஇலங்கையில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் தாக்கப்பட்ட காணொளி கடந்த ஆண்டு நடந்தது என பொலிஸார் தெரிவிப்பு

இலங்கையில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் தாக்கப்பட்ட காணொளி கடந்த ஆண்டு நடந்தது என பொலிஸார் தெரிவிப்பு

இலங்கையில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர், தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் பொலிஸார் தகவல்களை வெளியிட்டுள்ளநர்.சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்படும் காணொளியில், வெளிநாட்டவர் ஒருவரை, இலங்கையர் ஒருவர் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.இந்த சம்பவம் 2024 பெப்ரவரியில் மாத்தறை வெலிகம பகுதியில் நடந்தது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் சுற்றுலாப் பயணி, கடந்த ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதியன்று, பெலேனா கடற்கரையில் வைத்து தாம் தாக்கப்பட்டதாக முறைப்பாடு ஒன்றை வழங்கியிருந்தார்.இதனையடுத்து, 24 வயதான சந்தேக நபர், அதேநாளில் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் , சமூக ஊடகங்களில், இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றதைப் போன்று காட்டி, பொதுமக்களை தவறாக வழிநடத்தி, நாட்டின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.


Discover more from Taminews|Lankanews|Breackingnews

Subscribe to get the latest posts sent to your email.

இதையும் படியுங்கள்:  வைத்தியசாலை மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் வீசிய மாணவி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!