இலங்கை மக்கள் தொகையில் 21 வீதமானோர் மதுபானத்துக்கு அடிமையாகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மது அருந்துவதால் ஏற்படும் நோய் நிலைமைகளால் ஆண்டுதோறும் சுமார் 22,000 இலங்கையர்கள் உயிரிழப்பதாக புகையிலை மற்றும் மது அருந்துதல் தொடர்பான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது.நாட்டில் மது அருந்துதல் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார அச்சுறுத்தலாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.மது அருந்துவதன் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட நாடு தழுவிய தொடர்ச்சியான திட்டங்களுடன் உலக மது அருந்துதல் தினம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது.
இலங்கையில் மதுவால் வருடத்திற்கு 22,000 பேர் உயிரிழப்பு – 21% மக்கள் அடிமை
6