எல்லைதாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
அதற்கமைய, தலைமன்னாருக்கு வடக்காக 5 பேரும், பத்தலங்குண்டு பகுதியில் 9 கடற்றொழிலாளர்களும் இன்று அதிகாலை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.முன்னதாக இந்த மாதத்தில் கடந்த 13 ஆம் திகதி, ஏழு இந்திய கடற்றொழிலாளர்களும் 21 ஆம் திகதி நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்படுவதை தமிழக கடற்றொழிலாளர் சங்கங்கள் கண்டித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு விடயத்தில் இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும் அந்த சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.