Site icon Taminews|Lankanews|Breackingnews

இலங்கை சந்தையில் கிடைக்கும் பல முக மற்றும் சரும பூச்சுகளைப் பயன்படுத்த வேண்டாம் – நுகர்வோர் விவகார அதிகார சபை

இலங்கை சந்தையில் கிடைக்கும் பல முக மற்றும் சரும பூச்சுகளைப் பயன்படுத்த வேண்டாம் - நுகர்வோர் விவகார அதிகார சபை

இலங்கை சந்தையில் கிடைக்கும் பல முக மற்றும் சரும பூச்சுகளில் ஆபத்தான அளவில் அதிக அளவு கன உலோகங்கள் இருப்பதாக ஆய்வுகூட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தயாரிப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட வரம்புகளை மீறி, நுகர்வோருக்குக் கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும் வகையில் கன உலோகங்கள் உள்ளடங்கியுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.குறித்த தயாரிப்புகளின் பெயர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட உலோக செறிவுகளைக் காட்டும் அறிக்கையொன்றை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளை மீறும் முகப் பூச்சுகள் மற்றும் சரும பூச்சுகளை வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்த தயாரிப்புகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது ஏலவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் இது தொடர்பில் கடுமையான சட்ட அமுலாக்கம் பின்பற்றப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Exit mobile version