Site icon Taminews|Lankanews|Breackingnews

இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தினரால் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தினரால் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

தேசிய இடமாற்ற கொள்கையை அமுல்படுத்த கோரி இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தினரால் யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இதன் பொழுது எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய், வெளி மாகாணம் என்ன வேறு நாடா, ஆசிரியர் இடமாற்றம் மூலம் குடும்பத்தை சிதைக்காதே, சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் ஆசிரியர்களின் அவர்களின் உறவினர்களின் மருத்துவ சான்றிதழை கருத்தில் கொள், இடமாற்ற கடிதத்தில் காலத்தை வரையறை செய், அதிகாரிகளே நாட்டின் சனப்பெருக்கத்தை குறைக்காதே, ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கம் சார்பாக ஆறு பிரதிநிதிகள் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடி மகஜரை கையளித்தனர்.

Exit mobile version