Home » இலங்கை பொலிஸாருக்காக பிரத்யேகமாக நவீன அழகு கலை நிலையம்

இலங்கை பொலிஸாருக்காக பிரத்யேகமாக நவீன அழகு கலை நிலையம்

by newsteam
0 comments
இலங்கை பொலிஸாருக்காக பிரத்யேகமாக நவீன அழகு கலை நிலையம்

பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் ‘ரு சிரி’ என்ற நவீன அழகு கலை நிலையம் திறக்கப்பட்டுள்ளது.பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இது, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் சிகை அலங்கார இடமாக நேற்று (15) திறந்து வைக்கப்பட்டது.
சிறிது காலமாக பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே இங்கு சலுகை விலையில் சேவையைப் பெற முடிந்தாலும், இனிமேல், பெண் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இங்கு வருகை தரும் வெளி தரப்பினருக்கும் அழகு கலையை சலுகை விலையில் செய்ய முடியும்.பொலிஸ் அதிகாரிகளின் குடும்பங்களைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களுக்கு இங்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படுவது சிறப்பம்சமாகும்.பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் பதில் தலைவர் நில்மினி சமரதுங்க, அந்த சங்கத்தின் உறுப்பினர் சந்தீபா செவ்மினி மற்றும் பொலிஸ் களப் படை தலைமையகத்தின் கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரி உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின் கீழ் இந்த அழகு கலை நிலையம் வெற்றிகரமாக மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!