இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று (09) காலை விபத்துக்குள்ளானது. இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் ஹெலிகொப்டரில் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் தற்போது மீட்கப்பட்டதாகவும் இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது இலங்கை விமானப்படையின் 7 ஆம் இலக்க படைப்பிரிவுக்குச் சொந்தமான குறித்த ஹெலிகொப்டர் மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கலைந்து செல்லும் அணிவகுப்பின் போதே இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த ஹெலிகொப்டரில் இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் பயணித்துள்ளனர்.அதில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.