அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான பின்னணியில் சந்தையில் பல்வேறு அசௌகரியங்களை நுகர்வோர் எதிர்நோக்கி வருகின்றனர்.
இதேவேளை, தனியார் துறையினரால் இதுவரை 75,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தனியார் தரப்பினருக்கு அனுமதி வழங்க மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 32,000 மெற்றிக் டன் பச்சை அரிசியும், 43,000 நாடு அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.